இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் பணி நிமித்தமாக கோவில்பட்டி அருகேயுள்ள குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டிக்கு சென்றபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அய்யலுசாமி (வயது 89) அவர்களை சந்தித்தேன். சோ. அழகர்சாமிக்குப் பிறகு இவர் #கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து 1996இல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நான் இழந்தேன். சோ. அழகர்சாமியை எதிர்த்தும் 1989 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தேன். கோடங்கால் கிருஷ்ணசாமி, இராமசுப்பு, குளத்துள்ளாபட்டி பெருமாள்சாமி, போன்ற பலர் இந்த வட்டாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்கள்.
சோ. #அழகர்சாமி கிட்டத்தட்ட 5 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்ப்டடவர். அய்யலுசாமியும் 1996இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் என்னிடம் நெருங்கிப் பழகி பாசம் காட்டியவர்கள் தான். இவர்கள் இருவரையும் அரசியல் ரீதியாக தேர்தலில் எதிர்த்து போட்டியிட வேண்டிய காலக்கட்டம். அய்யலுசாமி எளிமையானவர். விவசாயம், கோழிப்பண்னை என்று நடத்தி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. #அய்யலுசாமி அவர்கள் பேருந்திலும், சைக்கிளிலும், நடந்தும் செல்வார். இவர் அரசியலில் அன்று பகட்டில்லாத மனிதராக தெரிந்தார். உடல் நலமும் விசாரித்தேன்.
கே. இராமானுஜம், ப.மு.பாண்டியன், அண்ணாதுரை, டி.ஆர்.குமார் போன்ற கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-03-2019
No comments:
Post a Comment