“மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த நூலில் “மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகிறது. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிலைமையும் அமைகின்றன.
பூமியில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வித்திலிருந்து மரம் உண்டாகிறது. அதுபோல மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் நினைப்பிலிருந்து அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகிறது” எனக் குறிப்பிடுகிறார்.
மனித மனத்திற்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மனத்தில் உருவாகின்ற எண்ணங்கள் தான் மனிதனின் செயலை நெறிப்படுத்துவதால் அந்த எண்ணத்தை உருவாக்கும் காரணிகளைப்பற்றி தெலிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மனதில் எண்ணங்களை உருவாக்கும் காரணிகளை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை
#புறக்காரணிகள்
#அகக்காரணிகள்
ஆகும்.
“புறக் காரணிகள்” என்பது மனிதனின் வெளி உலகில் தோன்றும் காரணிகள் ஆகும். சரியான நட்பு, தரமான தகவல் தொடர்பு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல், இணைந்து பழகும் தன்மை, பொறுமை, அன்பை வெளிப்படுத்தும் தன்மை – போன்ற பல புற காரணிகள் ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
இதைப்போலவே, உறவினர்கள், சகோதர – சகோதரிகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் துணை நின்கின்றன.
பள்ளி – கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடன்பயிலும் மாணவ-மாணவிகள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள் என பலவிதமான புறக் காரணிகளும் ஒருவரது வெற்றிக்கு துணை நிற்கின்றன.
“அகக் காரணிகள்” என்பது ஒருவரின் மனதில் உள்ள காரணிகள் ஆகும். இந்தக் காரணிகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக, குறிக்கோள்கள் தன்னம்பிக்கை புத்தாக்க சிந்தனை முடிவெடுக்கும் திறன் தலைமைப்பண்புகள் (தன் மதிப்பு போன்ற பல காரணிகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் உதவுகின்றன.
‘வெற்றி’ என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கட்டிடம் அல்ல. அது நாள்தோறும் நல்ல செயல்களால் உருவாக்கப்படும் ‘மாளிகை’ ஆகும்.
ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
••••
இங்கு அடிபட்டு விழுந்து, புண்பட்ட பின்புதான். சிலரின், உண்மை முகத்தைப் புரிந்து, கொள்ள முடிகிறது.!.
புண்பட்ட பின்பாவது, அதை உணர்ந்து, நம்மை நாமே...மாற்றிக் கொள்ள, முயற்சிக்க வேண்டும்.!.
இல்லையெனில், இனி எழுந்திருக்கவே முடியாதபடி, வீழ்த்தப்படுவோம்..
Subscribe to:
Post Comments (Atom)
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment