Tuesday, November 19, 2024

சென்னை தாம்பரத்தில் வைத்து நயினார் நாகேந்திரனின் கணக்கில்

 சென்னை தாம்பரத்தில் வைத்து நயினார் நாகேந்திரனின் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டது என பேசப்பட்டது. இது விசாரணையில் உள்ளது. நயினார் நாகேந்திரன் இதை மறுக்கிறார்.

இது மாதிரி தமிழ்நாட்டில் எல்லா விதமான அரசு தேர்ந்து எடுத்த மக்கள் பிரதிநிதிகள (எம்பி, எம்எல்ஏ, ) உள்ளாட்சி என அமைப்பில் உள்ளவர்களிடமும் இப்படியான பினாமி சொத்துக்கள் மற்றும் ஹவாலா மோசடி வழியாக கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய்கள் முடங்கி கிடக்கின்றன. இதில் பிடிபட்டவர்கள் திருடராகவும் பிடிபடாதவர்கள். யோக்கியர்களாகவும் இருந்து கொள்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தை வாங்குவதால் இப்படியான மறைமுக கொள்ளைகள் நடந்து பணங்கள் தேர்தல் நேரத்தில் இப்படி நடந்து கொண்டிருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ இல்லை சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ இப்படியான பணங்கள் ஓட்டை வாக்களார்களிடம் விலைக்கு வாங்க எல்லா கட்சிக்கும் ஏதோ ஒரு வழியில் வந்து சேருகின்றன. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடையதான். அதிகக் கடன்கள் அந்நிய முதலீடுகள் என்று நாடு இருக்கும் நிலையில் இப்படியுமான ஊழல் பெருச்சாளிகள். பிடிபட வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள். #voteforsales #elections #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 21-10-2024.


பிடிப்பட்ட பின்னாலே கள்வன் அதுமட்டும் - அவன்பேர் தலைவன்.. பாராளும் யோகங்கள் பரதேசி கோலங்கள்.. விதி வழி செல்லும் ஓடங்கள்.. கவியரசர்..

No comments:

Post a Comment

Reached me today…