Tuesday, November 19, 2024

#தமிழக_யதார்த்தஅரசியல்

 #தமிழக_யதார்த்தஅரசியல் 

———————————

நேற்று கோவை சென்று மீண்டும் சென்னை திரும்பிய போது விமானத்தில் சந்தித்த கொங்கு மண்டல அரசியல்ப் புள்ளியும் ஆலை அதிபருமான முக்கியஸ்தர் ஒருவர் என்னிடம் பேசும்போது  நான் சாதிய ரீதியாகப் பேசுகிறேன்  என்று நீங்கள் நினைக்க வேண்டாம்  என்ற பீடிகையோடு” 1970 இல் இருந்து நானும் பார்க்கிறேன்! தமிழ்நாட்டில் அதிக சமுதாய மக்களைக் கொண்ட கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், முக்குலத்தோர்கள், படையாட்சிகள் ஏன் நீங்கள் சார்ந்த  நாயுடுகள், வெள்ளாளர்கள், முதலியார்கள், செட்டியார்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் நாடார்கள் இப்படிப் பலரும்  வெகுவான மக்கள் தொகை கொண்டவர்களாக இருந்தும் இங்கே என்ன நடக்கிறது? இத்தனை சமுதாயங்களும் தங்களுக்கான ஓட்டு வங்கிகளை வைத்து இருந்தும் கூட  அரசியலில் முதல்வராக வர முடியவில்லையே! தமிழகத்தில் மக்கள் நல ஜனநாயக யதார்த்த அரசியல் இல்லை என்றார்


ஆனால், உங்கள் தலைவர் கலைஞர் இசை வேளார் சாதி வெறும் 15 ஆயிரதான்.இவர்களைச் சுற்றித்தானே தமிழ்நாட்டு அரசியல் இன்று வரை சுழன்றிருக்க வேண்டும்! இல்லையே! ஏன்? உண்மையைச் சொல்லப்போனால் குறைந்தபட்சம் 15 ஆயிரம் மக்கள் தொகை கூட இல்லாத ஒரு சமுதாயம்தான் அரசியல் சக்தியாக தமிழகத்தை ஆளுகிறது. அவர்கள் இட ஒதுக்கீடு செய்யும் எம் பி யோ அமைச்சரோ இல்லை எம்எல்ஏ வோ அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்த பணபலம் உள்ளவர்களுக்கு இடத்தையும் பதவியையும் கொடுத்து விடுவதன் மூலம் சரி செய்து தங்களின் குடும்ப அரசியலை பல படித்தி கொள்வது எப்படி?” என்று கேட்டார்.


அவர் கேட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும் இங்கிருக்கும் நிலைமை குறித்து நான், 

‘’ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அமைச்சர், எம்பி,எம்எல்ஏக்கள் என்று பிரித்துக் கொடுப்பதனால் இந்த மேகமூட்டம் சூழ்ந்து விட்டது . இன்றைய தலைமையானது இப்படிப் பிரித்துக் கொடுத்துவிட்டு தங்களுடைய சொந்த செல்வாக்கைத் தந்திரமாக தக்க வைத்துக் கொண்டு  கொண்டு ஆளுகிறது. ஆளுவது மட்டுமில்லாமல் தன்னுடைய எதோச்சதிகாரப்போக்கை எல்லா மட்டத்திலும்  தீர்மானிக்கும் சக்தியாகவும் மாவட்டம் தோறும் தங்களது அதிகரித்துவிட்ட பொருளாதார பின்னணியைக் கொண்டு வளர்ந்தும் விட்டது. நிலைமை சீராக இருப்பது போல ஒரு போலி தோற்றத்தை காட்டிக் கொள்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இது வெறுமனே பணபலம் உள்ள ஒரு அரசு  ஜனநாயக மற்ற ஆதிக்க அதிகாரக் கூட்டணி தான்”! என்று சொன்னேன்!


 அப்படியானால் அனைத்து சாதி இன மக்களுக்குமான அரசாக இது எப்படி இருக்கும்? இன்று மீண்டும் என்னிடமே கேள்வியைத் திருப்பினார்! எனக்கு அதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!


என்றாலும்,  அவர் என்னிடம் கேட்டதில் பல்வேறு சமூதாயங்களுக்கான ஒரு எதார்த்தமும் நியாயமும் இருப்பதாகத்தான் என் மனதிற்குப் பட்டது.!


#தமிழகஅரசியல்

#tamilnadupolitics


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸட்

15-10-2024

No comments:

Post a Comment

Reached me today…