Tuesday, November 19, 2024

#விருதுநகர்மாவட்டநிர்வாகம் #கரிசல்இலக்கியபணிகள்

 #விருதுநகர்மாவட்டநிர்வாகம்

#கரிசல்இலக்கியபணிகள் 

—————————————

2024- விருதுநகர் புத்தகத் திருவிழாவை அதன் மாவட்ட நிர்வாகம் நடத்திய போது அதன் மாவட்ட ஆட்சியர் திரு வீ. பி. ஜெயசீலன் ஐ ஏ எஸ் அவர்களின் முயற்ச்சிகள் கரிசல் மண் சார்ந்த படைப்பாளிகள் மற்றும்  பொதுமக்கள் அனைவருக்கு

மான  சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்து இருந்தார். அதன்படி கரிசல் மண் வட்டார எழுத்தாளிடமிருந்து வந்த 81 கதைகளில்  மூன்று  சிறந்த சிறுகதைகளை தேர்ந்து எடுத்து அதை எழுதியவர்களுக்கு  முறையே முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் இந்த ஆண்டு விருதுநகர் மூன்றாவது புத்தகக் கண்காட்சி விழாவில் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசிற்கென ஆறு சிறுகதைகளையும் அதில் மாவட்ட நிர்வாகம்  தேர்ந்தெடுத்தது.


போக வந்திருந்த கதைகளில் சிறப்பாகத் தென்பட்ட 32 கதைகளைத் தொகுத்து “ மரமும் மரபும் ” என்ற தலைப்பில்  தொகுத்து அழகிய நூலாகவும் விருதுநகர்  மாவட்ட நிர்வாகம்  இந்த ஆண்டு கொண்டு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த நூல் எனக்கு   நேற்று வந்து சேர்ந்தது உண்மையில் எனக்கு அது பெருமிதம்  ஆகவும்  ஒரு கலைக்கான சிறப்பான பணியை முனைவர் கிளிராஜ், பேராசிரியர்கள் க. ரவி, ஸ்டீபன் பொன்னையா  தொகுத்து முடித்துத் தந்திருக்கிறார்கள்  என்கிற மனநிறைவையும் தந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! 


ஏற்கனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கரிசல் இலக்கிய மலர் மற்றும் கரிசல் இலக்கிய  ஆய்வுக் கோவை என்ற இரண்டு சிறந்த மலர்களை  கடந்த 2023 ஆண்டு வெளியிட்டது.


அதேபோல் ‘’ கரிசல் நிலவியல் கதைகள்’’தொகுப்பு ஒன்றையும் சிறந்த கட்டமைப்புடன் கூடிய நூலாக வெளியிட்டது. இதில் 

கு. அழகிரிசாமி, கிரா, தனுஷ்கோடி ராமசாமி, வீர. வேலுச்சாமி, மேலாண்மை பொன்சமி, கொ.மா. கோதண்டம், ச.தமிழ்செல்வன், எஸ். ராமகிருஷ்ணன், பாமா,லட்சுமணப் பெருமாள் என பல முக்கிய கரிசல் மண் தமிழக படைப்பாளிகளின் மண் வாசனையோடு

சிறு கதைகள் இடம் பெற்றன,

  

அதேபோல திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும்  கடந்த ஆண்டு  2023 மாவட்ட புத்தக திருவிழாவில் பாரதி, மாதவையா, புதுமைபித்தன் துவங்கி இன்று வரை உள்ள படைப்பாளிகளின் வரை “நெல்லை சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்”என்று ஒரு அற்புதமான தொகுப்பு நூல் மற்றும் நெல்லை வட்டார கவிதை தொகுப்பும் வெளியிட்டது அவையும் எனக்கு வந்து சேர்ந்தது.


அதில் அ மாதவையா தொட்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கி ரா முதல் தனுஷ்கோடி ராமசாமி உள்ளிட்டு இன்றைக்கு வரைக்கும் உள்ள பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளைச் சேகரித்து வந்திருக்கும் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும். இந்த வாழும் கரிசல் மண்ணின் வெட்கைகள் அந்த மக்களின் வாழ்க்கைப் பாடுகள் தொடர்ந்த அதன் ஒரு வரலாற்றுப் போக்கில் மற்றும் நிலவியல் போக்கில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள் யாவும் கதைகளாகப்பதிவாகியுள்ளன.!


இதை முன் உதாரணமாக கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் இப்படியான கலைப் பணியை அந்தந்த மாவட்ட வட்டார எழுத்தாளர்கள் கலைஞர்களை ஊக்குவித்து எழுத வைத்துக் கொண்டு அதை தொகுப்பாக வர வேண்டும் என்பது மிக முக்கியமானது! ஏனென்றால் கலையும் இலக்கியமும்தான் பிற்காலத்து ஆவணங்களாக மாறுகின்றன. அந்த வகையில் சீரிய முறையிலான இந்த முக்கியமான பணியில் ஈடுபட்ட செயல்பட்ட  விருதுநகர் மாவட்ட மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகத்திற்கும் அதன் இரண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியையும் வணக்கத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு வீ பி ஜெயசீலன் ஐ ஏ எஸ்  இப்படி ஆர்வம் எடுத்த பாடுகள்  மற்ற  மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பான வழிகாட்டல், முன்மாதிரி ஆகும். திமுக ஆட்சியில் இது ஒரு நல்ல செயல் பாடு ஆகும்.


#விருதுநகர்மாவட்டஆட்சியர்

#விருதுநகர்மாவட்டநிர்வாகம்

#கரிசல்இலக்கியம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

19-10-2024.

@Collectortnv




No comments:

Post a Comment

Reached me today…