தென் தமிழ்நாட்டில் சமணர்கள் படுகை-சமணச் சிற்பங்கள் என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சமணர்கால வாழ்வியலுக்கு ஆதாரமாக இன்றளவும் இருக்கும் ஒரே ஒரு இடம் வெட்டுவான் கோவில்.
சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள கழுகுமலை என்ற ஊரிலுள்ள குன்றின் மீது தான் புகழ்மிக்க அந்த வெட்டுவான் கோவில் உள்ளது.அதோடு அந்த குன்றின் அடிவாரத்தில்,குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடவரைக் கோவிலும் உள்ளது.கழுகாசல மூர்த்தி என்ற பெயரில் முருகனுக்கு அமைக்கப்பட்ட குடவரைக் கோவில் அது.
No comments:
Post a Comment