Monday, December 26, 2016

ஞானபீட விருது

ஞானபீட விருது பெறுவதில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது 
................................................................................ ...........................................

ஞானபீட விருது 1965 ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியப்படைப்புகளில் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில் உள்ள சிறந்த படைப்பாளிக்கு விருதினை வழங்கி வருகிறது .

தமிழ் படைப்பாளிகளான அகிலன் ,ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை.1987 ல் நா . பார்த்சாரதிக்கு கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும்  அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த வாய்ப்பும் தவறிவிட்டது . ஏனெனில் ஞான பீட விருது மறைந்தவர்களுக்கு கொடுப்பது இல்லை  .

வங்கமொழிக்கு 6 முறையும் , கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாள மொழிக்கு 5 முறையும் , தெலுங்கிற்கு 3 முறைக்கு மேலும் ஞானபீட விருதுகள் வழங்கபட்டுள்ளன. 
கடந்த 12 ஆண்டுகளில்,தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு ஒரு முறைகூட வழங்காமல் ஞானபீடம் புறக்கணித்து விட்டது . தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இந்த ஆண்டும் வழங்காமல் வங்க மொழி கவிஞர் ஷங்கா கோஷ்என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது 

இந்த முறை கிராவுக்கு கிடைக்கும்  என்ற எதிர்பார்ப்பு இருந்தது . . கிராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி , பிரஞ்சு ,தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன . எல்லாரும் எதிர்பார்த்த ஞானபீடம் தமிழுக்கு கிடைக்கவில்லை என்று அனைவரையும் வேதனைபடுத்தியுள்ளது .

தனிப்பட்ட முறையில் கி.ராவுக்கு ஞானபீட வருது  வழங்காதது  ஞானபீட விருதின் நோக்கத்தையும் அதன் பெருமைகளையும் பாழ்படுத்தி விட்டது என்று குற்றம்சாற்றுகிறேன் .

#ஞானபீடம் 
#கிரா

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
26/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...