Tuesday, January 1, 2019

திருப்பாவை. மார்கழி 17.

திருப்பாவை. மார்கழி 17.
*******************************
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பிரான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.

விளக்கம்:
வாயில் காப்போன் கதவைத்திறந்து, பெண்மணிகைகளை உள்ளே விட, முதற்கட்டில் சென்று, பள்ளீகொண்டிருக்கும் கண்ணன், யசோதை, பலதேவர் மூவரையும் எழுப்புகின்றனர். 
"பல விதமான ஆடைகளையும், குளிர்ந்த பானங்களையும், பல்வகை உணவுப்பண்டங்களையும் வாரி வழங்கும் எங்கள் பெருமான் நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடியையொத்த பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! வானளாவி ஓங்கி வளர்ந்து அனைத்துலகங்களையும் அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே! பொன்னால் இழைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வா! பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...