கடந்த 10 நாட்களாக நாடாளுமன்ற தேர்தல் பணி, கிராமத்தில் அறுவடைப் பணிகள் என்று கவனித்துவிட்டு சென்னைக்கு திரும்பி நேற்று (09/01/2018) மாலைப் பொழுதில் 42வது புத்தகச் சந்தைக்கு சென்று கீழ்கண்ட சில புத்தகங்களை வாங்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 1977லிருந்து தற்போதுவரை 41 ஆண்டுகள் இந்த புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். இடையில் ஒரு வருடம் மட்டும் 1989இல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காரணத்தினால் அப்போது ஜனவரியில் நடந்த புத்தகச் சந்தைக்கு செல்ல இயலவில்லை. பல நண்பர்களை சந்தித்து அரசியல், பொதுவான விடயங்களை குறித்து பேசக் கூடிய சூழல் நேற்று மாலை அமைந்தது.
1. The Beauty of the Mountain, Memories of J. Krishnamurti, Rriedrich Grohe
2. Krishnamurti’s Journal
3. கிருஷ்ணமூர்த்தி தனக்குக் கூறியவை, ஜே. கிருஷ்ணமூர்த்தி
4. நல்லதங்காள் கதை, புகழேந்திப் புலவர்
5. மனதுக்குப் பிடித்த கவிதைகள், அழகிய சிங்கர்
6. அன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர் (ஷஹிதா - தமிழில்)
7. கசார்களின் அகராதி, மிலோராத் பாவிச் (ஸ்ரீதர் ரங்கராஜ் - தமிழில்)
8. இந்த இவள், கி.ரா
9. மாயமான், கி.ரா
10. தமிழ்க் களஞ்சியத்தின் கதை, ஆ. இரா. வேங்கடாசலபதி
11. பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு, தொ.பரமசிவன், ச.நவநீதகிருஷ்ணன்
12. தமிழறிஞர்கள், அ.கா.பெருமாள்
13. நாலுகெட்டு, எம்.டி.வாசுதேவன் நாயர்
14. கலைஞர் எனும் கருணாநிதி, வாஸந்தி
15. உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள், பெ. மணியரசன், கி.வெங்கட்ராமன்
16. தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள், இரா. மோகன்
17. நதிநீர் இணைப்பு, ஒரு சூழலியல் வன்முறை, பூவுலகின் நண்பர்கள்.
18. நியூட்ரினோ திட்டம், மலையளவு ஆபத்து, பூவுலகின் நண்பர்கள்
19. சுற்றுச் சூழல் சட்டம், தேவை புதிய பார்வை, பி.சுந்தரராஜன்
20. மேலை நாட்டறிஞர்களின் தமிழ்த் தொண்டு, முனைவர் எம்.ஏ.சவேரியார்
21. ஆண்டாள் அருளிச்செயல், முனைவர் சா. வளவன்
22. குமரப்பாவின் கிராமிய இயக்கம் தான் இன்றைய தேவை, முனைவர் க. பழனித்துரை
23. கிருஷ்ணதேவராயர், பன்மொழிப் புலவர், கா. அப்பாத்துரையார்
24. இலக்கிய உதயம், பேராசிரியர். எஸ். வையாபுரிப்பிள்ளை
25. வைணவக் கலைச்சொல் அகராதி, டாக்டர். தெ.ஞானசுந்தரம்
26. சொல், பொருள் அறிவோம், கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி
27. யாப்பு, டொனமூர் முதல் சிறிசேனா வரை, மு. திருநாவுக்கரசு
28. மொழியும், நிலமும், ஜமாலன்
29. தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும், கே. ராஜய்யன் (நெய்வேலி பாலு - தமிழில்)
30. இந்திய அரசமைப்பும் அதன் மீளாய்வும், சுனிதி குமார் கோஷ் (சே. கோச்சடை - தமிழில்)
31. ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு, பாவெல் பாரதி
32. கண்ணகி கோவிலும், வைகைப் பெருவெளியும், பாவெல் பாரதி
33. சேது கால்வாய்த் திட்டமும், ராமேசுவரத் தீவு மக்களும், சில குறிப்புகள், குமரன் தாஸ்
34. எங்கிருந்து தொடங்குவது, அ. வெண்ணிலா
35. கங்காபுரம், அ. வெண்ணிலா
36. கம்பலை முதல், டாக்டர் மு. ராஜேந்திரன், அ. வெண்ணிலா
37. கனவும் விடியும், அ. வெண்ணிலா
38. சில்வியா பிளாத், மணிக்குடுவை (ஜி. விஜயபத்மா - தமிழில்)
39. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி
40. என் மாஸ்டர் – தூய அன்பின் சாரம், பார்த்தசாரதி ராஜகோபாலாச்சாரி
41. விதியை வடிவமைத்தல், கம்லேஷ் டி. படேல்
42. பிம்ஸ்டெக் – சாகர் மாலா, பேரழிவில் தமிழர் தாயகங்கள், க. அருணபாரதி
43. நான் மனம் பேசுகிறேன், தீப் திரிவேதி
44. அரசியலின் இலக்கணம், ஹெரால்டு ஜே. லாஸ்கி (க. பூரணச்சந்திரன் - தமிழில்)
45. தத்துவத்தின் வரலாறு, ஆலன் உட்ஸ் (நிழல்வண்ணன், மு. வசந்தகுமார் - தமிழில்)
இந்த பட்டியலை தவிர உலகத் தமிழ்க் களஞ்சியம் (3 தொகுதிகள்), கோவை சே. ப. நரசிம்மலு நாயுடு எழுதி நண்பர் ந.முருகேசபாண்டியன் பதிப்பித்த ஆரிய திவ்விய தேசிய யாத்திரையின் சரித்திரம் என்ற இரண்டு நூல்கள் கிடைக்கவில்லை. அதை அடுத்தமுறை அங்கே செல்லும் வாய்ப்பிருப்பின் அதை வாங்க வேண்டும்.
பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார் எழுதி அடியேன் பதிப்பித்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் (கட்டபொம்மன் சரிதம்) சென்னை புத்தக சந்தையில் உயிர்மை அரங்கு எண். 573 இல் கிடைக்கும்.
இந்த புத்தக கண்காட்சி ஆரம்பக் கட்டத்தில் அண்ணா சாலை அருகேயுள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வந்ததாக நினைவு. பின்னர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிர்புறமுள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் நடந்தது. பிறகு தற்போது நடைபெற்றுவரும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலுக்கு மாற்றப்பட்டது. திரும்பபும் அதே பள்ளியில் நடத்தப்பட்டு இந்த ஆண்டு நந்தனம் திடலில் நடந்து வருகிறது. ஒருமுறை இந்த புத்தக கண்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் பாதிப்பை பதிப்பாளர்கள் அடைந்தனர்.
K.S.Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
10/01/2018
No comments:
Post a Comment