Monday, January 21, 2019

இதைதான் மக்கள் விரும்புகிறார்கள் எனில் வேறு என்ன சொல்ல முடியும்.

இன்று காலையில் செய்தித்தாள்களை புரட்டியபோது,மூன்று செய்திகள். இப்படித்தான் நாடும் இன்றைய அரசியலும் என்று மனதில் பட்டது.
1. தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் யாகம்,வாஸ்துபடி அறைகளை மாற்றுவது. இதென்ன மன்னராட்சி காலத்து கருமாந்திரங்கள் மாதிரி இருக்கின்றதே?
2. குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட சசிகலாவிற்கு நான்கு தனிஅறைகள், தனிசமையல், குளிர்சாதன வசதிகள்  மற்றும் சொகுசுக் கட்டில். விடுதலைக்கு போராடிய உத்தமர் காந்தி போன்ற தலைவர்கள் எல்லாம் கடும் குளிரிலும் வெறும்தரையில் படுத்து தண்டனையை அனுபவித்தனர். சசிகலா என்ன நீண்டகாலமாக அரசியலில் இருந்தவரா?ஏதோ வகையில் உள் புகுந்தவர்.
3. பெங்களூருவில் மதுகுடித்துவிட்டு கையில் மதுகோப்பைகளுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அநாகரிகமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி.

இதைதான்  மக்கள் விரும்புகிறார்கள் எனில் வேறு என்ன சொல்ல முடியும்.

#இன்றைய_அரசியல் #Todays_Politics #KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-01-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...