க்ரியா தமிழ் அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்க்கொடை!
———————————————-
இன்று (20-1-2019)சென்னைபுத்தகக்
கண்காட்சியின் கடைசி நாள்.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து பல விஷயங்களைப் பேச வாய்ப்புக் கிடைத்தது. ஆர்.கே.நாராயணனின்
மால்குடி டேஸ் ஆங்கிலபுத்தகத்தை தமிழில் பதிப்பித்துள்ளதாகக் கூறி என்னிடம் வழங்கினார்.
க்ரியா தமிழ் அகராதி 2020ல் அடுத்த பதிப்பை புதுப்பொலிவுடன் கொண்டு வர இருக்கிறோம் என்றார். பதிப்புப் பணிக்கான நபர்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களையும் மிகுந்த ஆதங்கத்துடன் எடுத்துரைத்தார்.
ராமகிருஷ்ணனின் தனி மனித நிர்வாக உழைப்பிலேயே க்ரியா தமிழ் அகராதியை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.
தலைவர் #கலைஞர்,#கிரா அதிகமாக இந்த அகராதியை பயன்படுத்தியை பார்த்ததுண்டு.
ஜனவரி 1992 இதன் முதல் பதிப்பு(அன்றைய விலை ரூ200/) வந்தவுடன் வாங்கி பொங்கல் பரிசாக
#ஈழத்தில் இருந்த அன்பு சகா #பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் இது அற்புதமான பணி. க்ரியா பதிப்பகத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்
க்ரியா தமிழ் அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்க்கொடை!
#க்ரியாதமிழ்அகராதி
#க்ரியாராமகிருஷ்ணன்
.............
இன்று (20-1-2019) தலைவர் கலைஞரின் முரட்டு இலக்கிய பக்தர் கவிஞர் இளையபாரதி அருமை சகா
பிரபாகரன் அவர்களின் வரலாற்று நூலை வழங்கிய போது....
#Ksrpost
20-1-2019.
KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-01-2019
No comments:
Post a Comment