வீட்டு நிலைகளில்,மாட்டு தொழவங்களில், வயல்களில். மானவாரி நிலங்களில் #பொங்கலுக்கு #வேப்பிலை, #கண்பீளைப்பூசேர்த்து காப்பு கட்டுவது மரபு.
பொங்கல் அன்று விடியலில் வேப்பிலை, கண்பீளைப்பூ, #ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டு வாசலிகளில் கட்டி வைப்பார்கள். சில வீடுகளில் சொருகி வைப்பார்கள்.
பொதுவாக இவை மூன்றுமே கிருமிநாசினியாகும். நோய் நொடி வராமல் இருக்கவும், துஷ்ட தேவதைகள் அல்லது காத்து கருப்பு நம்மை தாக்காமல் இருக்கும்.
தைப்பொங்கல் திருவிழா என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அப்போது புதிதாக மலரும் பூக்களையும் பறித்து சூரியனை வணங்கும் திருநாள்.
தை மாதத்தில் மலரும் ஆவாரம்பூ மற்றும் அப்போது தளிர்த்து பூத்து நிற்கும் கண்ணுப்பிள்ளையை பறித்து வந்து படைக்கிறார்கள்.
கண்பீளை பூச்சிகள் வராமல் தடுக்கக்கூடியது. மேலும் அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடியது.
அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்தபிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்க வேண்டும் என்ற உழவர்களின் நம்பிக்கை.
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-01-2019
No comments:
Post a Comment