ஒரு காலத்தில் நாடாளுமன்ற தொகுதியை சொன்னலே, அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் சொன்னவுடன் நினைவில் வரும் .
————————————————
இன்றைக்கு (02/01/2019) கொங்கு மண்டல நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஈரோடு செல்லும் வழியில் கோயமுத்தூர் விமான நிலையத்தில் இறங்கி அருமை சகோதரர் பத்மாலயா சீனிவாசன் அவர்களின் காரில் பயணிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக அவர சொன்னார். எனக்கு அவரை பற்றிய சரியான அறிதல் இல்லை. அவர் எந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் உடனேதெரிந்துகொள்ளவும்
முடியவில்லை.
மேலும்,இன்று தினமணி நாளிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சந்திரகாசி, ஏழுமலை, ராஜேந்திரன்,, ஹரி என்று படம் வெளியாகியுள்ளன. இவர்களில் பலரை நமக்கு பரிச்சயமாக தெரியவில்லை.
ஒரு காலத்தில் நாடாளுமன்ற தொகுதியை சொன்னலே, அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் சொன்னவுடன் நினைவில் வரும் . அந்த மாதிரி ஒரு அரசியல் நிலை இருந்தது. அப்போது முரசொலி மாறன் (திமுக-மத்திய சென்னை)
ஆர.வெங்கட்டராமன்(காங்கிரஸ்)
பி.ராமமூர்த்தி(மதுரை-கம்யூனிஸ்ட் )
நேசமணி காங்கிரஸ் -நாகர்கோவில்) செ.கந்தப்பன் (திமுக- திருச்செங்கோடு) கே.டி. கோசல்ராம்
(காங்கிரஸ்- திருசெந்தூர்) ஜி.கே. சுந்தரம் சுதந்திரா -கோவை) சி.எஸ் (காங்கிரஸ்- கோபி)கல்வியாளர் ஜி.ஆர்.தமோதரன் (பொள்ளாச்சி )வைகோ (சிவகாசி)ப.சிதம்பரம்(சிவகங்கை)
இப்படி அன்றைய எம்.பிக்கள் உடன் ஞாபகம் வரும் . இன்றைய நிலை வேறு.இவர்கள் மக்களுடன் இணைந்து களப்பணியாற்றினர்.
ஆனால் இன்றோநிலைமையே,
நாடாளுமன்ற உறுப்பினர் எந்த தகுதி ஆளுமை வேண்டாம்.
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
02/01/2018
No comments:
Post a Comment