கடந்த 26.1.2019 (குடியரசு நாள்) அன்றிலிருந்து திருப்பூர், உடுமலை பேட்டை, குண்டடம், காங்கேயம், சென்னிமலை போன்ற வட்டாரங்களில் கிட்டதட்ட 70 கிராமப்பகுதிகளுக்குச் சென்று அங்கே நடந்த கழகத்தலைவர் அவர்களின் அறிவிப்பின் படி நடத்திய #கிராமசபைக்கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
பொதுவாக கிராமப்புறங்களில் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு வசதி, சாலைவசதி ,கழிவு நீரகற்றம், மருத்துவ வசதியே பிரதானப் பிரச்சனைகளாக உள்ளது.
விவசாயிகளின் கடன் பிரச்சனை, பி.ஏ.பி, பாசனவாய்க்கால் பிரச்சனை, அமராவதி பாசனவாய்க்கால் , உப்பாறு போன்ற பிரச்சனைகளை எடுத்துக் கூறினார்கள்.விவசாய விளைபொருட்களுக்கு விலையில்லாததால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

கிராமத்து வெள்ளந்தி மக்களை சந்தித்தது மனதுக்கு நிறைவளித்தது.
#கிராமசபைக்கூட்டங்களில்
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
31-1-2019.
No comments:
Post a Comment