#கதைசொல்லி இதழ் -32
————————————-
#உணர்ச்சிக்கவிஞர்காசிஆனந்தன் அவர்கள் கதைசொல்லி 32 ஆவது இதழைப் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டினார். கி.ரா வும் நீங்களும் இதை அர்ப்பணிப்போடு எவ்வித சந்தா கட்டணம் இல்லாமல் விலை அற்று கொண்டுவருகிறீர்கள் என்றார்.
கதைசொல்லி பேச்சுத்தமிழ், வழக்குத்தமிழ், வட்டார வழக்கு, நாட்டுப்புற இயலை முதன்மைப்
படுத்துகிறது என்றார் கவிஞர் காசி.ஆனந்தன்.
மறைமலை அடிகளார் காலத்தில் இருந்தே தனித்தமிழ் இயக்கங்கள் இயங்கி தமிழுக்கு பெருந்தொண்டு ஆற்றி வருகின்றன.
மற்றொரு பக்கம் பேச்சுத்தமிழும் வட்டார வழக்குத்தமிழும் நம்முடைய கலாச்சாரத்தையும் சொல்கின்ற மொழிகளாகும்.தனித்தமிழும்,பேச்சுத்
தமிழும்-வழக்குத்தமிழும் இரு கண்களாகும்.
பேச்சுத்தமிழ் -வழக்குத்தமிழ் மூலம் பல வரலாற்று தரவுகள் ஆய்வுகளைக் கதைசொல்லி சொல்வது மகிழ்வைத் தருகிறது.அதற்கு வாழ்த்துக்கள் என்றார்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் கடந்த நாற்பதாண்டுகளாக நீங்கள் எங்களேடு யுடன் நிற்கிறீர்கள்.எங்களின் துணை நீங்கள் என்ற நிலையில் நன்றியோடு நினைக்கிறோம் என்றார்.இது சற்று என்னைக் கூச்சப்படுத்தியது. கவிஞர் காசி.ஆனந்தனை நாற்பதாண்டுகளாக நானறிவேன்.
எனக்கிருக்கும் பல்வேறு பணிச்சுமை காரணமாக கதைசொல்லி இதழை சரியான நேரத்திற்கு வடிவமைத்து வெளியிட முடிவதில்லை என்ற வருத்தத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
#kathaisoli
#கதைசொல்லி
#கவிஞர்காசிஆனந்தன்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-01-2019
No comments:
Post a Comment