————————————————-
அரசியலில் பொதுவாழ்வில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் .மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 1975 காலகட்டங்களில் அவசரநிலை பிரகடனம் செய்தபோது தமிழகத்தில் தலைவர் கலைஞர் ஆட்சி நடைபெற்றது. பல வட இந்தியத் தலைவர்களுக்கு மறைந்து வாழும் சரணாலயமாக தமிழகம் திகழ்ந்தது.
அச்சமயம்,திரு ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்கள் மந்தைவெளியில் பட்டினப்பக்கம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். சென்னையிலிருந்து ரயிலில் கிளம்பி கல்கத்தாவிற்கு சென்ற அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
அது போல ராம்விலாஸ் பாஸ்வான்.,லல்லுபிரசாத் யாதவ், தற்போதைய பீகார் முதலமைச்சர் நித்திஸ் குமார் போன்றவர்கள் சென்னை வந்தபோது நான் சட்டக்கல்லூரியில் படித்த சமயத்தில் நான தங்கிய M.U.C(Madras University Club)விடுதியில் தங்கியதுண்டு .
அவ்விடுதிஅந்நாட்களில் அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு உண்டதுண்டு.
அந்நாட்களில் வடஇந்தியத் தலைவர்களுக்கு பாதுகாப்பாக தமிழகம் திகழ்ந்தது. தலைவர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
அப்போதிருந்தே பெர்ணாண்டஸ் எனக்கும் அறிமுகம் உண்டு. தலைவர்
கலைஞர் நள்ளிரவு கைது செய்யப்பட்ட நேரத்தில் தமிழகம் கண்ணீர் வடித்தது.
அந்த காலகட்டத்தில் கலைஞர் சிறையில் சந்திக்க இவர் வந்த போது உடன் இருந்தேன்.
ரயில்வே ஊழியர்களுடைய பொது வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து அகில இந்தியாவையே அதிரச் செய்தவர். அதனால் இந்திரா அம்மையாருக்கு அவர் மீது கோபமுண்டு
பெர்ணாண்டஸ் மீது பரோடா டைனமிக் வழக்கு என்ற கிரிமினல் வழக்கு போடப்பட்டது. பிரபுதாஸ் பட்வாரி முன்னாள் தமிழக கவர்னர் அவரும் அவ்வழக்கில்சேர்க்கப்பட்டார்.
அவருக்கு கடுமையான சிக்கல்களை இந்திரா உருவாக்கினார். பெர்ணாண்டஸ் வெளியே நடமாடமுடியாத நிலை இருந்தது.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் விவசாயச் சங்கப் போராட்டம் ஆரம்பித்தது. அப்போது விவசாயச் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு போராட்டம் வெற்றி பெற என் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணுஉலை, ஸ்டெர்லைட், மீனவர்கள் கைது கோக் எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் முக்கிய போராட்டங்களில் துணை நின்றவர்.
சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த
இராமேஸ்வரம் கோதண்டராம கோவில்
அருகே 1998ல் ஆய்வு நடத்தினர்.
அவரிடம் எப்போதும் இரண்டு மூன்று பைஜாமா, ஜிப்பா மட்டுமே இருக்கும். மிகவும் எளிமையான மனிதர். அவருடைய கையெழுத்து ஆங்கிலத்தில் மிகவும் கவனத்தைக் கவரும். சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது அவரை அழைத்துக் கூட்டங்கள் நடத்தியதுண்டு.
கடந்த பத்தாண்டுகளாக முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களைப் போலவே இவரும் நினைவிழந்து வீட்டிலயே முடங்கிவிட்டார் என்பது கவலையான செய்தி.
#ஜார்ஜ்பெர்ணாண்டஸ்
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29.1.2019
No comments:
Post a Comment