Tuesday, January 1, 2019

'நியூ இயர் Jk

'நியூ இயர்' என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. முற்றிலும் புதிதானது முன்னிலுள்ளது என்று அர்த்தம் கொள்கிறீர்களா? அதாவது, இதற்கு முன்பு நடந்திராத புத்தம் புதியது. 

புதியது என்று சொன்னாலும்  இங்கு(சூரியனுக்கு கீழேயுள்ள இவ்வுலகில்) எதுவும் புதியது இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். 'ஹேப்பி நியூ இயர்' ( மகிழ்ச்சியான புத்தாண்டு) என்று சொல்லும் பொழுது உண்மையிலேயே அது புதியதுதானா? அல்லது, பழைய அதே வழிமுறைகளை மீண்டும் மீண்டும் தொடர்வதா? -- பழைய அதே சடங்குகள், பழைய அதே மரபுகள், பழைய பழக்க வழக்கங்கள்,  நாம் செய்து கொண்டிருப்பவையின் அதே தொடர்ச்சி. வரப்போகும் வருடமும் இதைத்தான் செய்யப் போகிறோம், அல்லவா?

இதற்கு முன்பு நீங்கள் ஒருபோதும் கண்டிராத, புத்தம் புதியது என்று ஏதாவது இருக்கிறதா?  இது மிகவும் முக்கியமான கேள்வி. இதுவரை நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் கண்டிராத ஒன்றாக மாறுவதற்கான ஒரு கேள்வி. 

அதாவது, பழையதில் உறிப்போன நம் மனம், அதன் பிடிவாதமான கொள்கைகளிலிருந்து, முன் தீர்மானங்களிலிருந்து, தன் சுபாவத்திலிருந்து விடுபடுமா? மனதானது, இவற்றை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி, உண்மையிலேயே புதிய வருடத்தை தொடங்குமா? இதை நாம் செய்தால் அதுவே மகத்தானது. ஏனெனில் நம் வாழ்க்கை குறுகியதாக, மேம்போக்கானதாக, அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. 

நாம் இங்கு பிறந்து விட்டோம். அது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நாம் பிறந்தோம், கல்வி கற்றோம் -- ஒருவேளை கல்வியே இவற்றிற்கு தடையாக இருக்கலாம். நம் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் திசையை அப்படியே மாற்ற முடியுமா? இது சாத்தியமா? அல்லது, குறை கூறிக்கொண்டே நம் வாழ்க்கையை இதேபோல குறுகியதாக அற்பமானதாக அர்த்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோமா?

எண்ணங்களின் கூட்டு சேர்க்கையால் உண்டானவற்றைப் பிடித்துக் கொண்டு நமது மனதை நாம் நிரப்புகிறோம். இது ஒரு பிரசங்கம் அல்ல.

எல்லா சர்ச்சுகளிலும் கோவில்களிலும் புதிய வருடத்தை  கொண்டாடுவதாக இருக்கலாம். ஆனாலும், பழையதே தொடரப்படுகிறது. பழைய அனைத்தையும் விடுத்து, புதியதாக, சுத்தமான slate - உடன் இந்த ஆண்டை   தொடங்க முடியுமா?

 ஜே கிருஷ்ணமூர்த்தி

Madras 1st public Question and Answer meeting, 1st January 1985  &
(Last line) Public Talk 3 Madras (Chennai) 01 January 1983
 #ksrpost

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...