Wednesday, January 9, 2019

வீட்டுக் குப்பைகள் உண்மையில் மதிப்பற்ற குப்பை அல்ல!

வீட்டுக் குப்பைகள் உண்மையில் மதிப்பற்ற குப்பை அல்ல! 
---------------------------------------------------------
குறைந்தபட்சம் இருபது லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பக்கெட், பெயிண்ட் வாளி, க்ரோ பேக், பிளாஸ்டிக் ட்ரம், வாட்டர் கேன்ஸ், சிண்டெக் டேங்க், சிமென்ட் தொட்டி போன்ற ஏதாவது ஒரு பாத்திரத்தை வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். 
அதில் கீழ் புறத்தில் நான்கைந்து இடங்களில் துளையிட்டுக் கொள்ளுங்கள். அதில் நான்கு இஞ்ச் உயரத்திற்கு மண், மரத்தூள், காயர்பித், மணல் ஏதாவது ஒன்றைப் பரப்புங்கள். அதற்கு மேல்
தினப்படி சேரும் வெங்காயத்தோல், பூண்டுத்தோல், இஞ்சித்தோல், பச்சை மிளகாய்த்தோல், காய்கறிகள் வேஸ்ட் மற்றும் வீட்டுக் குப்பைகள் எல்லாவற்றையும் போடுங்கள். அதை மூடும்படி அதன்மேல் மண், மரத்தூள், காயர்பித் அல்லது க்ரோயிங் மீடியம் ஏதாவது ஒன்றைத் தூவுங்கள். அவ்வப்போது சாம்பல் தூவுங்கள். நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறை கிளறி விடுங்கள். ( கிளற முடியாவிட்டாலும் தவறில்லை).

பாத்திரம் நிரம்பியதும் அதன் மேல் நான்கு இஞ்ச் கணத்துக்கு மண் பரப்பி நன்கு மூடி நிழலில் வைத்து விடுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கிளறி விடுதல் சிறப்பு. 
நாற்பத்தி ஐந்து நாட்கள் கழித்து எடுத்துப் பாருங்கள்! உங்கள் கையில் இருப்பது தங்கமே தான்!
இதை உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளுக்கும் அவ்வப்போது போடும் உரமாகப் பயன்படுத்தலாம். நேரடியாக விதையிடவும், செடி வைக்கவும் பயன்படுத்தலாம். 
அடுத்த கண்டெய்னரில் மற்றொரு சுழற்சிக்கு இதே செயல்களைத் தொடருங்கள்.

குறிப்புகள் :
~~~~~~~~~
1. முட்டை ஓடுகளை காய வைத்து அரைத்துப் போடுங்கள்.
2. டீத்தூள், காபித்தூள் சேர்க்கையில் ஈரம் நன்கு வடிந்த பின் போடவும்.
3. ஆப்பிள், வாழைப் பழத் தோலை அப்படியே போடலாம். 
4. மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றின் தோல்களைப் போடும் போது சிறு துண்டுகளாக நறுக்கிப் போடுங்கள். அதை மூடும் கலவை கொஞ்சம் தூக்கலாக இருக்கட்டும். 
5. பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள், துளசி, அலங்கார பூக்கள் இலைகள் எல்லாவற்றையும் சேர்க்கலாம். 
6. வாசலில் விழும் இலை தழை குப்பைகள் போடலாம். 
7. காகிதங்களைச் சேர்க்கும் போது சிறு துண்டுகளாக்கிப் போட வேண்டும். 
Image may contain: plant, tree, outdoor and nature
*சிறப்புக் குறிப்பு* 
வாரம் ஒரு முறை மண்புழு எரு அல்லது மக்கிய தொழு எரு அரைக் கிலோ அளவு சேர்ப்பது சிறப்பு. குப்பையை மூடுவதற்கு நாம் சேர்க்கும் மண்ணிலும் தேங்காய் நார்க் கழிவிலும் நுண்ணுயிர்கள் இருக்கும். அவையே அக்கழிவுகளைச் சிதைத்து எருவாக மாற்றுகிறது. இன்னும் அதில் நுண்ணுயிரிகள் அதிகம் செறிந்த எருவைச் சேர்க்கும் போது , சிதைத்தல் பணி துரிதமாக நடந்து உயர்தரமான எருவாக மாற்றம் பெறும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...