Tuesday, January 15, 2019

தமிழக அரசே #திருவள்ளுவர் மற்ற #விருதுகள் என்ன ஆனது..... இன்று காலைவரை அறிவிப்பு வரவில்லை..


தமிழக அரசே *#திருவள்ளுவர் மற்ற#விருதுகள் * என்ன ஆனது.....
இன்று காலைவரைஅறிவிப்புவரவில்லை.
—————————————————
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்கமானது ஆண்டுதோறும் மொழி,இலக்கிய, கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்குவது உண்டு. இன்று காலை வரை
அறிவிப்பு வரவில்லை.

திருக்குறளின் நெறிமுறைகளை பரப்பும் ஒருவருக்கு *திருவள்ளுவர் விருது* ஆண்டுதோறும் வழங்குவது உண்டு. 1986 முதல் 32 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

*பாரதியார் விருது* 1997 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

*பாரதிதாசன் விருது* 1978 முதல் சிறந்த கவிஞருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

*திரு.வி.க விருது* 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 

*கி.ஆ.பெ.விசுவநாதம் விருது* தமிழ் அறிஞர் ஒருவரை தேர்வு செய்து 2000 ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.

*காமராசர் விருது* 2006 முதல் மக்கள் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 

*அறிஞர் அண்ணா விருது* 2006 முதல் தமிழ் சமுதாயம் முன்னேற பாடுபடும் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

இந்தாண்டு இந்த நிமிடம் வரை அறிவிப்பு வரவில்லை. இந்த கலெக்‌ஷன் கரெப்ஷன் ஆட்சிக்கு இதைவிட வேறு வேலைகள் நிறைய உள்ளன. தலைமைச்செயலக அதிகாரிகளுக்கு இவர்களுக்கு துணைபோவதற்கே நேரம் போதவிலை. இதில் எங்கிருந்து தமிழ்மொழி வளர்ச்சி குறித்தெல்லாம் யோசிக்க நேரம் இருக்கும். இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் தமிழ் மொழி மீதான அக்கறை. அல்லது விருதுக்கு ஏற்ற கமிஷன் பேரம் படியவில்லையோ என்னவோ? 

கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என உரையாற்றியவர்களிடத்தில் இதெல்லாம் எதிர்பார்ப்பது தவறு தான். கம்பராமாயணம் எழுதிய சேக்கிழாருக்கு கடைசி நேரத்தில் அவசர அவசரமாக அளித்தாலும் ஆச்சர்யமில்லை.

#தமிழகஅரசுவிருதுகள் 
#கலெக்‌ஷன்கரப்ஷன்ஆட்சி
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-01-2019


Image may contain: one or more people, people standing, ocean and outdoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...