________________________________
மத்திய ஆட்சி பரிவாரத்தில் முக்கியமாக இருப்பவர், தமிழக மற்றும் இலங்கைப் பிரச்சினைகளைக் குறித்து சில ஆலோசனைகள் இன்று என்னிடம் கேட்டப்பொழுது;
1. காவேரி, முல்லை பெரியார், பாலாறு, நெய்யாறு, கேரளாவின் அச்சன் கோவில்- பம்பை ஆற்றுப்படுகையை தமிழகத்திலுள்ள வைப்பாறோடு இணைத்தல் மற்றும் 60க்கும் மேற்பட்ட தமிழக நதிநீர்ப் பிரச்சினைகளைக் குறித்து பரிசீலிப்பது,
2. ராஜீவ் படுகொலையில் சம்பந்தபட்ட எழுவர் விடுதலை,
3. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தடுத்து நிரந்தரத் தீர்வு கிடைப்பது,
4. ஈழத்தமிழர் பிரச்சனை:
அ. ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக ஈழ அகதிகள் முகாமில் இருக்கின்ற ஈழத் தமிழர்களை எந்தவிதமான பயணச் செலவும் இல்லாமல் இலங்கைக்கு அனுப்பவேண்டும், கடந்த 2006-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்து ஈழத் தமிழர்கள் அகதிகள் முகாமிலிருந்து தங்கள் தாய் நாடான இலங்கைச் செல்ல வேண்டுமென்றால், முகாமில் தங்கிய காலத்திற்கானக் கட்டணத்தை (Staying Charge) செலுத்திவிட்டு தான் செல்லவேண்டும். கையில் பணமில்லாமல் திண்டாடும் அவர்களால் ஆயிரக்கணக்கானப் பணத்தை எப்படி செலுத்தமுடியும். எனவே நாடு திரும்பும் ஈழ அகதிகளை முகாமில் தங்கியக் கட்டணத்தையும் ரத்து செய்து, இலவசமாக இலங்கைக்கு பயணம் செய்யும் வசதியும் மத்திய அரசு ஏற்படுத்தவேண்டும்.
ஆ. இலங்கைத் தமிழகர்கள் சைவத்தை பின்பற்றுபவர்கள்,இந்துமதகோவில்கள் அங்கு அழிக்கப்படுகின்றன, அங்குள்ள தமிழர்கலாச்சாரத்தைப்பாதுகாக்க
வேண்டும்.
இ.சிங்களர்களால் அபகரிக்கப்பட்டு
ள்ளன ஈழத்தமிழர்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் திரும்பவும் உரிய தமிழர்களுக்குகிடைக்கவேண்டும்.
ஈ. அங்குள்ளத் தமிழ் விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள், காணாமல் போனவர்கள் குறித்து , முள்ளிவாய்க்கால் துயரத்தின் போது கைது செய்யப்பட்டவரின் விடுதலை.
உ. தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடிய அரசியல்தீர்வுகிடைக்கபொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தவேண்டும்.
ஊ. கடந்த காலத்தில் ஈழத்தமிழ்ர் மத்தியல் நடந்த இன அழிப்புக்கு சர்வதேச சுதந்திரமான நேர்மையான பொறிமுறை விசாரணை வேண்டும்.
5. ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் நைனிடாலுக்கு நியாயமில்லாமல் மாற்றப்பட்டது, தமிழகத்தைப் பொறுத்தவரை இப்படி பல விடங்கள் உண்டு.
6. சேலம் இரும்பு ஆலையை
தனியாருக்குவிற்பதைத்தடுக்கவேண்டும்,
7. விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுற்றுசூழல்பாதிக்கின்றதொழிற்சாலை
கள்,திட்டங்களைத் திரும்ப பெறுவது,
8.கடலூர்,நாகப்பட்டினம்துறைமுகத்தை மேலும் விரிவுபடுத்துவது, சிறு துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் முட்டம், வாலிநோக்கம் போன்ற 10-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மீனவர்கள் பயன் பெறும் வகையில் தமிழகத்தில் அமையவேண்டும்,
9. நடப்பில் செயலற்று இருக்கும் கயத்தாறு, கோவில்பட்டி, செட்டிநாடு, அறந்தாங்கி, உளுந்தூர்பேட்டை மற்றும் சோழாபுரம் விமானநிலையங்கள் பயன்பாட்டுக்கு வருகின்ற வகையில் திட்டங்களை வழங்குவது,
10. நிலுவையிலுள்ள இரயில்வே திட்டங்கள் பட்டியல்,
11. மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு,
12. இந்து மகா சமுத்திர அமைதியும், தமிழகத்தின் தென்முனையின் எதிர்கால சவால்கள்.
13. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கப் பிரச்சினைகள்,
இந்தக் கடமை மனநிறைவாக இருந்தது. இது தான் என்னுடைய அரசியல் செயல்பாடும், இதுதான் என்னுடைய அரசியல் தளமும். கடந்த இருபது முப்பது ஆண்டுகள் முன்னும் அதன் பின்னும் சிலரால் எம்பி, எம்எல்ஏ என்று என்னை ஆகவிடாமல் தடுத்தவர்களுக்கு அது மகிழ்ச்சியாக அப்போது இருக்கலாம், நான் அதையும் எளிதாக அலட்சியமாக கடந்துதான் சென்று இன்று வரை இயங்கி வருகிறேன். பல விடயங்களை வெளிப்படையாக சொல்லமுடியாது. இந்த செயல்பாடு தான் அரசியல், எனது 49 ஆண்டுகால அரசியல் செயல்பாட்டுக்கு இதுவே எனக்கு போதுமானது. நான் செய்த பணிகள் அனைத்தும் எதிர்காலத்தில் உரிய ஆவணங்கள் வெளிப்படுத்தும். இதுதான் வாழ்வின் அடையாளம், பதவி பவுசுகள் அல்ல.
இந்தப் பிரச்சினைகளின் தன்மை எனக்குத்தான் தெரியுமென்று டெல்லி வட்டாரம் அழைத்துப் பேசி என்னிடமிருந்து இந்த விரிவான அறிக்கையை பெற்றதை விட வேறென்ன எனக்கு வேண்டும். இதில் பெருமை கொள்கிறேன்.
No comments:
Post a Comment