———————————————————-
கீதையில் அர்சுனன், “தளராத மனமுடைய மிக உயர்ந்த ஆத்மாக்கள் எப்படி இருப்பார்கள்?” என்று கேள்வியை கிருஷ்ணரிடம் கேட்கிறார்.
அதுபோல ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த, அவர் பேச்சைக் கேட்ட பலர் இந்தக் கேள்வியை எழுப்புவார்கள். அவர்களுக்கு இந்த அத்தியாயம் பதிலாக அமையும்.
சில சந்தர்ப்பங்களில் அவருடைய மனோபாவம் குழந்தையைப் போல இருக்கும். அதிலும், அரசியல் குறித்த சந்தர்ப்பங்களில் மனதிற்குட்ப்பட்ட மனோ நிலையிலும், அண்ட வெளியிலும், அவருக்கு எப்போதும் ஆழ்ந்து சிந்திக்கும் நிலை இருந்து தெளிவாகத் தெரிந்தது. அவர் அடிக்கடி ஆழ்ந்த சிந்தனைகளில் அமிழ்ந்து விடுவார்.
அந்நேரங்களில் ஆசை, பாசம் போன்ற உணர்ச்சிகள் பற்றியும் கண்ணியத்தைப் பற்றியும் மனதிடம் கேள்விகள் கேட்பார். சில நேரங்களில் எதிர்காலத்தை நமக்கு சொல்பவராக இருக்கிறார்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைகளும், வாசகங்களும் இவருடைய காலத்திற்கு ஒவ்வாத எதிர்காலத்திற்கேற்றதாக இருக்கும்.
உலகத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தின் உள்நோக்கத்தை முன்பே அறிந்திருந்தவராகக் காணப்படுகிறார்.
உலக நட்புகளை வைத்து, அண்ட சராசரங்களில், அவரால் தொடர்புபடுத்தி பொதுவான நிலையை எடுத்துச் சொல்ல முடிகிறது.
அவர் சில நேரங்களில், தான் நேரில் சந்தித்த மிருகங்களைப் பற்றி தன் அனுபவங்களைக் கதைகளாக சொல்வார்.
சில சமயங்களில் புனித பீட்டர், சொர்க்கம், நரகம், ரஷியா, உணவு விநியோகிக்கும் ரஷ்ய அதிகாரிகள் முதலியவர்களைப் பற்றிய கதைகளை மீண்டும், மீண்டும் உற்சாகத்துடனும், மிகவும் நகைச்சுவையுடனும், தன் பேச்சுத் திறமை வெளிப்படும் வகையில் கதைகள் சொல்வார்.
அவருக்கு பொறாமையோ, கெட்ட எண்ணமோ முழுவதுமாக இல்லை. புதியவர்களைச் சந்தித்தால் அவர் மிகவும் வெட்கப்படுவார்.
புதியவர்களுடன் அவர் பேசாமல் ஏற்படுத்தும் தர்மசங்கடமான நிசப்தத்தை வேறு யாராவதுதான் இட்டு நிரப்ப வேண்டும்.
பல வருடங்களாக அவர் நிறைய மக்களைச் சந்தித்து வந்தார். சன்னியாசிகள், புத்தபிட்சுகள், சித்தர்கள், ஊர் ஊராக அலையும் யோகிகள் எல்லோரும் ஒன்றாக இவரைச் சந்திக்க வருவார்கள். வந்து தங்கள் கேள்விகளுக்கான பதிலையோ அல்லது மன ஆறுதலையோ பெற்றுச் செல்வார்கள்.
அவர்களைச் சந்திக்க ஜே.கிருஷ்ணமூர்த்தி எப்போதுமே மறுப்பு சொன்னதில்லை. காவி உடை உடுத்தியிருக்கும் அந்த சன்னியாசிகள் எப்போதும் அவர் மனத்துள் ஆழ்ந்த கருணையை ஏற்படுத்துகிறார்கள்.
ஏனென்றால், ‘சதுர் மாதத்தில்’ அதாவது, நான்கு மாத பருவ மழையின் போது, அந்தத் துறவிகள் அலைந்து திரிவதை நிறுத்திக் கொள்வார்கள். ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். நான்கு மாதங்கள் கழிந்தபின் மீண்டும் தங்கள் புனித யாத்திரையை ஆரம்பித்து விடுவார்கள்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க, சில நேரங்களில் 700 மைல்களையும் கடந்து நடந்து வருவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவரை சந்திக்க இவ்வாறு நடந்து வருவார்கள்.
இரண்டு சன்னியாசிகளில் ஒருவருக்கு வெண்குஷ்டம் இருந்தது. மற்றொருவர் இளைஞராக அழகான கண்களை உடையவராக இருந்தார்.
இருவரும், வெள்ளை பருத்தித் துணிகளை தங்கள் வாயைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். ஏனென்றால், தாங்கள் சுவாசிக்கும்போது கூட எந்த ஒரு பூச்சிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதால்,
அவர்களால் ஆங்கிலம் பேச முடியாது. அதனால் அவர்களுக்கு பாபுல் ஜெயகர் அதை மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது.
பாபுல் ஜெயகர் வாசற்படியில் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும், ஜே.கிருஷ்ணமூர்த்தி அமர்ந்திருந்த பாயில் அமர்ந்திருந்தார்கள்.
சன்னியாசிகளின் விதிமுறைப்படி, அவர்கள் அமர்ந்திருக்கும் அதே பாயில் பெண்ணாகிய ‘பாபுல் ஜெயகர்’ அமரக் கூடாது. அவர்களுடைய கேள்விகள் மனதை உருக்குவதாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருந்தது. அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும், தங்களுடைய உடலை முழுவதுமாக மறைத்திருந்தார்கள்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டார். நீண்ட நேரம் விவாதம் நடைபெற இடம் கொடுக்கப்பட்டது.
ஒரு வருடமாக இந்த வெள்ளை உடை சன்னியாசிகள் ஜே.கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்க வரவில்லை. என்ன நேர்ந்தது என்று சொல்வது கடினம்.
அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய தலைமைக்கு எதிரான ஜே.கிருஷ்ணமூர்த்தியைச் சந்திப்பதை மறுத்ததால் அவர்கள் வராமல் இருந்திருக்கலாம்.
மதிய சாப்பாட்டிற்குபின் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓய்வு எடுக்கிறார். மாலை நான்கு மணிக்கு மக்களைப் பார்க்க ஆரம்பிக்கிறார். கண்களை இழந்த பெண்மணி இவரைப் பார்க்க வருகிறார்.
இவர் தன் கைகளை அப்பெண்மணியின் கண்களில் வைக்கிறார்.
தன் குழந்தையை இழந்த ஒருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் அமர்ந்திருக்கிறார். அவருடைய கைகளை ஜே.கிருஷ்ணமூர்த்தி பிடித்துக் கொள்கிறார். அப்படி பிடிப்பது மறைமுகமாக (சிம்பாலிக்காக) அவருடைய கண்ணீர் துளிகளை துடைத்துக் கொள்வது போலவும், அவரை உள்ளூர குணப்படுத்துவது போலவும் இருக்கும்.
இந்த வன்மையான உலகில், தடுமாறி திகைப்புறும் இளைஞன், இவரிடம் பதில்கள் பெற வருகிறான்.
1970களின் முடிவில், சிலர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது 1990ல் தன்னை நாடுபவர்களுக்கெல்லாம் தான் கிடைக்கும்படி செய்கிறார். யாருக்கும் எதிராக தன் கதவுகளை மூடுவதில்லை.
கற்பனைகள் மிகுந்த (பிரமை பிடித்த) இளைஞன், உபகிரகங்களுடன் தொடர்பு கொண்டவர். துன்பத்தில் ஆழ்ந்து இருக்கும் பெண், இளம் பிராயத்தவர்கள், வயதானவர்கள், கண்ணற்றவர்கள் நாடி வந்தனர்.
அவர் எப்போதும் அதிகம் வேலை செய்பவராகவும் இல்லை. அதிக களைப்புள்ளவராகவும் இல்லை.
அவர் பெயரும் போதனைகளும் இந்தியா தேசம் முழுவதும் தெரிந்திருக்கிறது. இமாலயத்திலுள்ள ஆசிரமங்கள் மத்தியிலும், கல்வி நிறுவனங்கள் மத்தியிலும் வெகுவாகத் தெரிந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள புத்த மதத்தினர், இவரை நாகார்ஜீனன் தலைமுறை தத்துவத்தை போதிக்கும் மிகப்பெரிய ‘ஆசான்’ என்று கூறுகிறார்கள்.
இந்துக்களின் குருக்களும், சாதுக்களும் இவரை அத்வைதத்தில் விடுதலை பெற்ற மிகப்பெரிய ‘ஆத்மா’ என்று கூறுகிறார்கள்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியை தற்காலத்தில் ஆழ்ந்து போதிக்கும் ‘ஆசான்’ என்று எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள்.
மீண்டும் வீட்டில் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறார். சில நேரம் பிராணாயாமம் செய்கிறார். மிகவும் லேசான இரவு உணவு உட்கொள்கிறார். பச்சடி, பழம், கொட்டைகள், சூப், காய்கறிகள் சாப்பிடுகிறார்.
ஒரு ஆசிரியனுடைய பாத்திரத்தை அவர் கைகள் எடுத்துக் கொள்கின்றன. அவருடைய குரல் மாறி ஒலிக்கிறது. அவர் குரல் சக்தி நிறைந்ததாகவும், பலமடங்கு ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கும். மெளனம் அவர் அறையில் நிலவி இருக்கும்.
அவர் தன்னை எல்லாவித மாற்றத்துக்கும் உட்படுத்திக் கொள்கிறார். அவர் கூர்ந்து கவனிப்பதையோ, கேட்பதையோ, கேள்விகள் கேட்பதையோ நிறுத்துவதில்லை.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மனது, எப்போதும் சில சமிக்ஞைகள் கொண்டிருக்கும். ஆனாலும், ஆறுகளுக்கும், தனக்கும் சில தனிப்பட்ட ஒற்றுமைகள் இருப்பதாக சொல்வார்.
1961ல் பம்பாயில் பேசும்போது கங்கையைப் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார்:
“அதற்கு ஒரு முதலும் ஒரு முடிவும் உண்டு. ஆனால், ஆரம்பம் என்பது ஆறு அல்ல. முடிவும் ஆறு அல்ல. இடையில் ஓடுவதே ஆறு ஆகும். அது கிராமங்கள், நகரங்கள் வழியே பாய்கிறது.
எல்லாப் பொருளும் அதனுள்(ஆற்றில்) கவர்ந்திழுக்கப்படுகிறது. அது மாசுபடுத்தப்படுகிறது. அழுக்கும், மனிதக் கழிவுகளும், அதனுள் வீசி எறியப்படுகிறது.
ஆனால் இந்த அழுக்குகளோடு செல்லும் ஆறு சில மைல்கள் கடந்ததும் அது தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறது.
இந்த ஆற்றிலும், ஆற்றினாலும்தான் எல்லா உயிரினங்களும் வாழ்கின்றன. ஆற்றின் அடியில் மீன்களும், ஆற்றிற்கு மேல் மனிதன் அதன் நீரைக் குடித்தும் வாழ்கின்றான். இதுதான் ஆறு என்பது.
இந்த ஆற்றிற்குப் பின்னால், தண்ணீரின் மிக உயர்ந்த அழுத்தம் இருக்கிறது. தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையைத்தான் ஆறு என்கிறோம்.
களங்கமில்லா மனதும், இந்த ஆற்றைப்போன்றது. அந்த மனதிற்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. நேர காலமும் இல்லை.
ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசும் போதும், நடக்கும் போதும், தன்னுடைய காலணிகளுக்கு பாலிஷ் செய்யும்போதும், தான் நடக்கும் வழியில் கல்லை எடுத்து எறியும் போதும், தன் சக்தியை வீணாக்குவதில்லை.
அவருக்கு வயது ஏறிக்கொண்டே போகும்போது, அவர் கைகளில் ஏற்படும் நடுக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இந்த உலகத்தின் இரைச்சலுக்கும், மாசுவிற்கும் அவருடைய உணர்ச்சிகள் நிறைந்த உடல் மிக அதிகமாக தாக்கத்திற்குள்ளாகிறது.
அவர் அதிகமாக, இனம் புரியாத நோய்க்கு ஆளாகிறார். அவர் மிகவும் பலகீனமாகிறார். அவர் குரல் மாறுபடுகிறது.
சில நேரங்களில் சிறு குழந்தைபோல் மாறி விடுகிறார். சில புதுமைகள், புதுமையான கேள்விகள் கேட்கிறார்.
திடீரென்று மயங்கி விழுந்து விடுகிறார். குறிப்பாக அவர் பூரணமாக நம்பும் ஆட்கள் அருகில் இருந்தால், அவர் தன்னைத்தான் குணப்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்.
அவர் இயற்கையோடும், மலைகள், மரங்கள், இந்த பூமியோடும் வைத்திருக்கும் தொடர்பு விநோதமாக குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
இயற்கைக்குட்பட்ட அண்ட வெளியில் நுழைய அவருக்குத் தகுதி இருக்கிறது. உயிரோட்டத்தையும் அவரால் உணர முடிகிறது.
கடைசியாக, ஒரு மரத்திற்குள் எதிரொலிக்கும் ஒலியைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். (வெளி உலக இரைச்சல்கள் எல்லாம் முற்றுப் பெறும்போது)
பறவைகளும், விலங்குகளும் அவரை நம்புகின்றன. அவர் தோட்டத்தின் தனிமையில் உட்கார்ந்து புல்லின்மேல் வறுத்த அரிசியைத் தூவுவதைப் (பார்த்திருக்கின்றேன்) பார்க்கலாம்.
அவருக்கு மிக அருகில் பறவைகள் அமர்ந்து அரிசியை பொறுக்குவதையும், பார்க்கலாம். சில பறவைகள் அவருடைய தோளில் உட்கார்ந்துவிடும். பறவைகள் அவருடைய தோளில் உட்கார்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சொகுசையும் அனுபவிக்கும்.
தன்னை விவரிக்கும்போது, ‘பிரெளனிங்கின்’ வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார்.
‘அணில் போன்ற கூச்சமுடையதும், தூக்கணாங் குருவியைப் போல நிலையற்ற குணமுடையதும்”
இரவு 10.30 மணியளவில் அவர் தூங்க செல்கிறார். தூங்குவதற்கு முன் அந்த நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் மன கண்முன் விரைவாகச் செல்கிறது. சில நொடிகளில் நேற்றும் அவற்றின் நிகழ்ச்சிகளும் உடனே வந்து மறைந்து விடுகின்றன.
உறக்கத்திலும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உடல், பறவைகளைப்போல் தன்னுள் முடக்கிக் கொள்கிறது.
அவர் திடீரென்று விழித்துக் கொள்வதை விரும்புவதில்லை. தான் அரிதாகத்தான் கனவுகளைக் காண்பதாக அவரே சொல்கிறார்.
அவர் படுக்கையை விட்டு எழும்போது அதிகமாக துணிகள் கசங்கப்படுவதில்லை. சிறிது சுருக்கம் கூட படுக்கையில் இருப்பதில்லை.
அவருடன் நெருக்கமாக தங்கியிருப்பது என்பது, நமக்கு ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதாகும்.
அவர் மிகுந்த பிரகாசத்துடன் விளங்குகிறார். அவருடைய அருகாமைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு அவருடைய கூட்டாளிகளுக்கு சிறிது நேரம் பிடிக்கிறது.
சிலசமயங்களில் தன் நண்பர்களிடம், மிகவும்கவனமாக இருக்கிறார்களா, கூர்ந்து கவனிக்கிறார்களா என்ற கேள்விகளையும் கேட்பார்.
தன் நண்பர்கள் மக்களிடம், அவர்களின் வார்த்தைகளையும் கேட்டு, அவர்களின் உணர்ச்சிகளை வலிமையுடன் பிரதிபலிக்கிறார்களா என்பதை கூர்ந்து கவனிக்கிறார்.
சீரழிந்த மனங்கள், அவரைச் சுற்றி சூழ்ந்து இருப்பது என்பது முடியாத காரியம். அந்த மனம், அவரிடமிருந்து பிரிந்து செல்கிறது அல்லது பின் தங்கி விடுகிறது. பல பரிணாமங்களில் அவருடைய ஆற்றல் தெரிகின்றது.
அவருடைய உடல் பலவீனமாகவும், மென்மையாகவும் தளர்வாகவும் இருக்கிறது.
ஆனால், அவருடைய மனது எப்போதுமே தளர்வடைதில்லை. அவர் அடிக்கடி சொல்வார். அவருக்கு வயது ஏறிக்கொண்டே போகும்போது, எல்லையில்லாத சக்தி ஒன்று அவரைக் கொண்டு செல்வதாக சொல்வார்.
அவருடைய உற்சாகம் அதிகரித்தது போலவே அவருடைய அவசரமும் அதிகரித்துள்ளது. எதுவும் அவரை சோர்விழக்கச் செய்தது இல்லை.தன் உடலை முன் நிறுத்தி அவர் வேகமாக நடக்கிறார்.
தன்னைத்தானே பரிசோதித்து கொள்கிறார். இவருடைய வயதில் பாதி வயதை அடைந்தவர்களை இவருக்கு நிகராகச் செல்ல முடியாது.
அவர் ஒன்றும் செய்யாமல், படுக்கையில் படுத்திருக்கும்போதுதான் வயதானவராகவும், பலகீனராகவும் (மென்மையற்றவராக) தென்படுகிறார்.
அவர் கைகள் அதிகம் நடுங்குகிறது. அவருடைய உடல் சுருங்கிவிட்டது.(சிறுத்துவிட்டது). ஆனால் காலை உணவின்போதும், மதிய உணவின்போதும், அவர் கலந்து கொள்ளும் விவாதத்தின் போதும், சொற்பொழிவுகளின்போதும் எல்லாவித சுருக்கங்களும், நீங்கிவிடுகின்றன.
அவருடைய தோல் ஒளி ஊடுருவக் கூடியதாக இருக்கிறது. பரிசுத்தமானதாக இருக்கிறது. உள்ளுக்குள்ளிருந்தே ஒளி பெற்றதாக இருக்கிறது.
90 வயதில் கிருஷ்ணாஜி தொடர்ந்து பயணம் செய்கிறார். பேசுகிறார். விழிப்புடன் இருக்கும் மனதையும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளும் திறமையுடைய மனதையும் கண்டுபிடிக்க அலைகிறார்.
பார்த்து அறியும் திறனும், எந்த ஒரு நிழலும் படியாது தோன்றும் மலர்ச்சியும் மூளையை அதாவது அதன் செயல்பாட்டையே மாறுபடச் செய்கிறது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி எப்போது பேசுவதை நிறுத்துகிறாரோ அப்போது அவருக்கு இறப்பு நேரிடும் என்று அவரே 1980ல் ஒருநாள் சொல்லியிருக்கிறார். அவருடைய உடலுக்கு ஒரே ஒரு வேலை மட்டுமே இருந்தது. தன்னுடைய போதனைகளை வெளிப்படுத்துவது ஒன்றேதான் அது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை முடிந்து விட்டது. 1986ம் வருடம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி பசிபிக் ஸ்டாண்டர்டு நேரப்படி மதியம் 12.10க்கு ஓஜெய்யிலுள்ள ‘பைன் காட்டேஜில்’ உயிர் நீத்தார்.
அந்த ‘காட்டேஜில்’ அவர் ஐந்து வாரங்களாக கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவதியுற்றார். மிளகு மரத்திற்கு எதிராக உள்ள அறையில்தான் இறந்தார்.
65 வருடங்களுக்கு முன்பு, இதே அறையில்தான் தன் நிலையை உணர்ந்த பெரிய மாறுதலை அடைந்திருந்தார்.
கலிபோர்னியாவிலுள்ள ‘வென்துரா’ என்ற இடத்தில் அவருடைய உடல் தகனம் நடந்தது. உடலை எரித்த சாம்பலை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒன்று ஓஜெய்யிக்கும், இன்னொன்று இந்தியாவுக்கும், மூன்றாவது இங்கிலாந்திற்கும் எடுத்து செல்லப்பட்டது.
இந்தியாவில் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றிலும் நடு நீரோட்டமான ராஜ்காட்டில், வாரணாசி நதியிலும் இமயமலையின் ஆழத்திலுள்ள, இந்த நதியின் உற்பத்தி ஸ்தலமான கங்கோத்திரியிலும் சென்னையிலுள்ள அடையாறு கடற்கரையிலும் கரைக்கப்பட்டது.
இவருடைய சாம்பல் மெலிதான கட்டுமரத்தில் ஏற்றப்பட்டு வலிமை வாய்ந்த அலைகள் நிறைந்த கடலினூடே எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் சாவுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். இறந்த பிறகு உடலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று. பெரிய மரக்கட்டைகள் போன்று, உயிர் இழந்த உடலும், தீ நாக்குகளால் விழுங்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்.
நான் மிக எளிமையானவன். அதைப்போலவே என்னுடைய இறுதி யாத்திரையும் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அவருடைய சாவுக்குப் பிறகு ஈமக்கிரியைகளோ இறை வணக்கமோ, பெரிய ஆடம்பரமான ஊர்வலங்களோ, ஆர்ப்பாட்டமோ இருக்கக் கூடாது. அவரை தகனம் செய்த இடத்திற்கு மேல் ஞாபகச் சின்னம் எதுவும் எழுப்பக் கூடாது.
எந்த சந்தர்ப்பத்திலும், போதனைகளைப் போதித்த ‘ஆசான்’ தெய்வப் பிறவியாக கருதப்படக் கூடாது.
‘ஆசான்’ முக்கியத்துவமானவரல்ல. அவருடைய போதனைகளே மிகவும் முக்கியமானது.
அவருடைய போதனைகளே அழிவிலிருந்தும், களங்கத்திலிருந்தும், திரிபிலிருந்தும், பாதுக்காக்கப்பட வேண்டியது. “ போதனைகளைப் பொறுத்த வரையில் வாரிசு, தலைவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
என்னை அடுத்து பொறுப்பேற்று எனக்கும் பிரதிநிதியாக என் பெயர் சொல்லிக் கொண்டு என்னுடைய போதனைகளை இப்போதும் எதிர்காலத்தில் எப்போதும் எவரும் சொல்லக் கூடாது.
ஆயினும், தன் நண்பர்களிடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இந்தியாவிலும், இங்கிலாந்திலும், இவர் பெயர் தாங்கி நிற்கும் கல்வி நிறுவனங்கள், அவர் இட்டு சென்ற வழியிலேயே செயல்படலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவற்றை விமானத்தின் காலடியில் நின்று பெற்றுக் கொண்டவர் பாபுல் ஜெயகர் என்ற பெண்மணி. அவர் தன்னுடைய வீட்டிற்கு பயணமானார்.
வெளி வாசற்கதவு வழியாக உள்ளே நுழைந்தபோது திடீரென்று கனத்த மழை வரை வரவேற்று அவர் மீது விழுந்தது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அஸ்திக் கலசத்தை அந்தப் பெண்மணியின் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆலமரத்தடியில் வைக்கும் வினாடி வரை தொடர்ந்து சில நிமிடங்கள் பெய்தது.
எப்படி திடீரென்று பொழிய ஆரம்பித்ததோ அதேபோல் திடீரென்று நின்றுவிட்டது.
சுவிட்ஜர்லாந்திலுள்ள ரோஜ்மண்டில் ஜூலை மாதம் 1985 ஆம் வருடம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கும் சாவின் அறிவிப்பு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உடலில் எழுந்தது. அது தெளிவாக தெரிந்தது.
பாபுல் ஜெயகர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தபோது, “பிராக்வுட்” பார்க்கில் அதே வருடம் செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்குப் பகுதியிலுள்ள சிறிய சமையலறையில், சந்திக்க முடிந்தது.
அப்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி அவரிடம், சொல்வதற்கு மிகவும் சீரியஸ்ஸான விஷயம் இருக்கிறது என்றும், சுவிட்சர்லாந்தில் இருக்கும் எனக்கு எப்போது உயிர் நீப்போம் என்பது தெரிகிறது என்றும்.....எந்த இடத்தில், எந்த நேரத்தில் என் இறப்பு நேரிடும் என்பதும் தெரியும். ஆனால் யாரிடமும் நான் அதை வெளிப்படுத்தப் போவதில்லை என்று சொன்னார்.
மேலும் சொல்கையில், “என்னுடைய உரு அழிய ஆரம்பித்துவிட்டது” என்றார்.
அதிர்ச்சியான இந்த விஷயத்தைக் கேட்ட பாபுல் ஜெயகர் என்ற பெண்மணி அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்.
அக்டோபர் 15ஆம் தேதி, வாரணாசிக்குப் போகும் முன்னர் டெல்லிக்கு வந்திருந்தார். சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக வந்திருந்தார். அக்டோபர் 29ம் தேதி அப்போதைய துணை ஜனாதிபதியும், நெருங்கிய நண்பருமான, பிற்பாடு பாரத ராஷ்டிரபதியாகவும் பதவி ஏற்ற திரு. ஆர். வெங்கட்ராமனைச் சந்தித்தார்.
பிறகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் வீட்டில் விருந்தின் போதும் பாபுல் ஜெயகர் வீட்டில் நடந்த விருந்தின் போதும் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார்.
இந்திரா காந்தி இறந்த ஒரு வருடத்திற்கு பின், ராஜீவ் காந்தி ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தது இதுதான் முதல் தடவை. இந்தச் சந்திப்பில் ஒரு ஆழ்ந்த நெருக்கமும், நெகிழ்ச்சியும் இருந்தது.
டெல்லியிலிருந்து வாரணாசிக்குப் பயணம் செய்த ஜே.கிருஷ்ணமூர்த்தி அங்கு குழுமியிருந்த சுமார் மூவாயிரம் பேர் கொண்ட முகாமில் கலந்து கொண்டார்.
வெகுநேரம் ஜோராகப் பெய்த பருவ மழையால் புது வாழ்க்கையில் வரவுக்கான அடையாளங்கள் மரங்களிலும், புதர்களிலும் தெரிகின்றது. ஒளிமிக்க மஞ்சள் பச்சை வண்ண கடுகுசெடிகள், ஆற்றங்கரையில் தோன்ற ஆரம்பிக்கின்றன.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் இருந்தபோது தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயிரக் கணக்கான எண்ணெய் விளக்குகள் அவர் குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஏற்றி வைக்கப்பட்டன.
கங்கை ஆறு, மிதக்கும் எண்ணெய் விளக்குகள் காரணமாக ஒளி மிகுந்து காணப்பட்டது. மாலைத் தென்றலில் அவ்விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன.
அங்கு கூடியிருந்த கூட்டத்தில் கிருஷ்ணாஜி பேசினார்.
“வாரணாசிப் பண்டிதர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டார். வேதாந்த புத்தமத கோட்பாடுகலை நன்கு படித்தறிந்த கல்விமான்களிடம் பேசி கொண்டிருந்தார்.
மேலும் ராஜ்காட்டின் எதிர்காலம் குறித்து அந்நிறுவனத்தின் அங்கத்தினர்களிடம் விவாதித்தார்.
பெனராஸ் இந்து சர்வகலாசாலையில் பெளதீக ஆசிரியராக இருந்த ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு பல வருடங்கள் தெரிந்த பேராசிரியர் கிருஷ்ணா என்பவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, “ ராஜ்காட் கல்வி நிறுவனத்தின்” தலைவராக அமர ஒத்துக் கொண்டார்.
ஆர். உபசானி, மகேஷ் சாக்ஸேனா என்ற இரு யாத்திரிகர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த நிலத்தை சுற்றி பார்க்கும்போது தாங்களும் அவருடன் சேர்ந்து சுற்றி பார்த்தார்கள்.
உழவர்களையும், யாத்திரிகர்களையும் பார்த்ததும், சிரித்தும், அந்தப் பழமையான நகரின் நாடித்துடிப்பைக் கேட்டும் வந்தார்.
முப்பது வருடங்களாக ராஜ்காட்டில் வாழும் உபசானி நில வேலைகளை கவனித்துக் கொண்டு வந்தார்.
அவரின் பொறுப்பும், கரிசனமும், அவரை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு வெகு அருகில் கொண்டு சென்றது. புதிதாக வந்த மகேஷ் ஸேக்ஸான் என்பவர் முன்னாள் மத்திய போலீஸின் தலைமை அதிகாரியாக டெல்லியில் இருந்தவர்.
வளைந்து கொடுக்கக் கூடிய உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சேக்ஸானா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காவி உடை உடுத்தி, ”உண்மை”யைத் தேடிச் செல்பவராக ஆனார்.
பல வருடங்கள் ஹிமாலயத்திலேயே வாழ்ந்தார். அதன் பிறகு ராஜ்காட் வந்தடையும் வரை, ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து உண்மையை தேடிக் கொண்டிருந்தார்.
அவருடைய தோற்றமும், ஆழ்ந்த நிலையும், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அருகாமைக்கு அவரை இட்டு சென்றது.
உடனே அவரும், அந்த நிறுவனத்தில் சேர்ந்து, அதனுடைய செயலாளராக ஆனார்.
No comments:
Post a Comment