Tuesday, February 2, 2021

———————————————————
கிராமத்துத் துணிவெளுப்பு எனக்கு பிடித்தமானது. உவரிமண், வெள்ளாவி, நீலம் வைத்து கிராமத்து ஊரணியில், குளத்தில் துவைத்து வெயிலில் காயப்போட்டு இஸ்திரி போடுகின்ற துணிகளுடையத் தன்மையே வேறு. ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒரு குறி இடுவதும் ஆச்சரியம்

படிப்படியாக கிராமங்களில் இப்போது துணிவெளுப்பு அதிகமாக கிடையாது. கடந்த 10, 15 ஆண்டுகளாக தாமிரபரணியில்தான் வேட்டியும் வெள்ள சட்டையும் திருநெல்வேலியில் போடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒரு குறி இடுவதும் ஆச்சரியம்

கிராமத்தில், அந்த காலத்தின் பாடல்களைப் பாடிக்கொண்டு துணிகளைத் துவைப்பது இன்றைக்கும் என் நினைவில் உள்ளன. இசைமேதை விளாத்திக்குளம் சுவாமிகள் துணி வெளுப்பிலிருந்து வரும் சப்தங்களை அது ஒரு வகையான இசை மற்றும் ஒரு ராகத்தின் முன்னெடுப்பு தான் என்பார். கிராமத்து துணி வெளுப்பு இப்போது அதிகமாக இல்லை, இருப்பினும் பழைய நினைவுகளுக்காக இந்தப் பதிவு.

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
27-12-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...