Tuesday, February 2, 2021


———————————-
The Western Ghats region is home to 3,387 leopards, against India’s population of 12,852, says the report released recently by the Ministry of Environment, Forest and Climate Change.
Kerala has 650 leopards stealthily roaming its tiger reserves. The State’s leopard population is the third highest in the Western Ghats region. Karnataka tops the list with 1,783 leopards, followed by Tamil Nadu with 868, according to the Status of Leopards in India 2018 report. Goa has 86.
The leopard population was counted during the tiger population assessment undertaken in 2018. The leopard population was estimated to be within the forested habitats in tiger-occupied States, the report said.
The presence of the animal was recorded in the forested areas of Western Ghats, Nilgiris, and sporadically across much of the dry forests of Central Karnataka. Leopard population of the Western Ghats landscape was reported from the four distinct blocks. The Northern block covered the contiguous forests of Radhanagari and Goa covering Haliyal- Kali Tiger Reserve, Karwar, Honnavar, Madikeri, Kudremukh, Shettihali Wild Life Sanctuary (WLS), Bhadra and Chikmagalur. The Central population covered southern Karnataka, Tamil Nadu, and northern Kerala covering the forests of Virajpet, Nagarhole, Bandipur, Madumalai, Satyamangalam, Nilgiris, Silent Valley, Wayanad, BRT Hills, MM Hills, Cauvery WLS, Bannerghhata National Park. A second central cluster covering central Kerala and Tamil Nadu comprising the Parambikulam-Anamalai - Eravikulum - Vazachal population.
The southern leopard population block in southern Kerala and Tamil Nadu comprised the forests of Periyar-Kalakad Mundanthurai -Kanyakumari. A total of 6,758 leopard photographs were obtained from Western Ghats from camera traps. The images helped in the identification of 1,681 adults and sub-adults. While noting that the leopard population had increased in most of the tiger reserves in the Western Ghats landscape, the report cautioned that the growing human population and increasing fragmentation of landscape led to increased human-wildlife interactions in the region.
........................
நாடு முழுவதும் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில், 3421 சிறுத்தைகளும், கர்நாடகாவில் 1,783 சிறுத்தைகளும் மற்றும் மகாராஷ்டிராவில் 1,690 சிறுத்தைகளும், தமிழகத்தில் 868 சிறுத்தைகளும், கேரளாவில் 650 சிறுத்தைகளும் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் 3,387 எண்ணிக்கையிலும், உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பிகார், ஷிவாலிக், கங்கை சமவெளி காடுகளில் 1,253 சிறுத்தைகளும் வடகிழக்கு மாநில வனப்பகுதிகளில் 141 சிறுத்தைகளும் உள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி மற்றும் மத்திய கர்நாடகாவின் வறண்ட காடுகள், வடக்கு பகுதியில் ரத்னகிரி மற்றும் கோவா, கர்நாடகா, தென் தமிழகத்தில் களக்காடு, முண்டந்துறை, கன்னியாகுமரி, பரம்பிகுளம், ஆனைமலை, எரவிக்குளம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும், வடக்கு கேரளாவில் சில பகுதிகளிலும், சிறுத்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலுள்ள கேமராக்களில் 6,758 சிறுத்தைகளின் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் நிலப்பரப்பில் பெரும்பாலான இடங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பிடுகையில், வளர்ந்து வரும் மனித மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பை கூறு போடுவது போன்றவை, மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று அறிக்கை எச்சரித்தது.
28-12-2020.

No comments:

Post a Comment

2023-2024