Tuesday, February 2, 2021


———————————————————-
நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் கிடைக்கவேண்டிய முழுமையான புகழ் கிடைக்கவில்லை என்பது வேதனையான விடயம். இன்றைக்கும் கோவில்பட்டி,கிராவின் இடைச்செவல், பத்தமடை, திருநெல்வேலி என அவர் தமிழகம் முழுவதும் கால் பதித்த இடங்களை மறக்கமுடியுமா.
கோவில்பட்டி பேருந்து நிலையலத்தில் விபூதிப் பொட்டு வைத்து, சாந்தன கலர் சட்டைப் போட்டுக்கொண்டு கம்பீரமாக காலையிலிருந்து மாலை வரை தனியார் பேருந்துகளை 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒழுங்குபடுத்தும் மேலாளராக இருந்தார். அவர் பெயர் வி.செல்லையாத் தேவர்அவர் காருக்குறிச்சி அருணாசலத்தை ஆசனாக ஏற்றுக்கொண்டவர்.

காருக்குறிச்சி அருணாசலம் கிராவிற்கு நெருங்கியதோழர்.கு.அழகிரிசாமியை
யும் விளாத்திக்குளம் சுவாமிகளையும் மிகவும் நேசித்தார்.
திரும்பவும் செய்திக்கு வருகின்றேன். வி.செல்லையாத் தேவர் முயற்சியில் நடிகர் ஜெமினிகணேசன்,மங்கையர் திலகம் சாவித்திரி உதவியில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் சிலை கோவில்பட்டி அரசுப் பொது மருத்துவமனை அருகில் 9.7.1967-ல் திறக்கப்பட்டது. அந்த விழாவை கோவில்பட்டி அதன் சுற்றுவட்டார மக்கள் எல்லாரும் சிறப்பாக நடத்தினர். தூத்துக்குடி, திருநெல்வேலி ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் எம்.எம்.எஸ்.ராஜேந்திரன் ஐஏஎஸ் தலைமைத் தாங்கினார் (பிற்காலத்தில் ஒடிசா மாநில கவர்னராக இருந்தார்.) சிலையை நடிகர் ஜெமினிகணேசன் திறந்து வைத்தார், நடிகை சாவித்திரியும் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

காருக்குறிச்சிப் பற்றி என்னுடைய நிமிர வைக்கும் நெல்லையில் விரிவாக பதிவு செய்துள்ளேன். இந்தாண்டு அவருக்கு, அந்த இசைமேதையை தமிழகம் கொண்டாடவேண்டும். அவருக்கு சிலை அமைத்த நடிகர் ஜெமினிகணேசனுக்கும் இந்த ஆண்டு நூற்றாண்டு.

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
29-12-2020

No comments:

Post a Comment

2023-2024