Tuesday, February 2, 2021

 மார்கழி மாதம்; சில நாட்களுக்கு முன் மாலை யாரும் வந்துவிட கூடாதென்று சில பணிகளை கவனித்தேன். திடீரென வந்தார் ஒரு வயோதிகர். உடலால் வளைந்தவர். உள்ளத்தால் நிமிர்ந்தவர்! நம்பி . வேலூரிலிருந்து வருகிறாராம். ராமானுஜரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். இருட்டிவிட்டது. ‘எம்பெருமனார் சரித்திரம்’ என்று நாடகம் நடத்துகிறார் என்று அறிந்தேன். ராமானுஜரைப் பற்றி அவரது ஆராய்ச்சி அவ்வளவு இவ்வளவு என்றில்லை. ராமானுஜர் விழாவை இனித் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லம் கொண்டாட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஒரு வாரமாக வருகிறவர்கள் போகிறவர்களிடத்திலெல்லம் அதையே அழுத்திச் சொல்லி கொண்டிருப்பதால், அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குள் குதூகலம் குமிழிவிட்டது.

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
02-01-2021

No comments:

Post a Comment

#முதலைக்கண்ணீர்

இன்றைய சூழலில் பலருக்கு  #முதலைக்கண்ணீர் வடிப்பதே வழக்கமாகிவிட்டது!  முதலை இரையை உண்ணும் போது கண்ணீர் வடிக்குமாம்! அது பாதிக்கப்பட்ட இரைக்கா...