Tuesday, February 2, 2021


(ஜனவரி 2 நினைவு நாள்.)
——————————————————
நாம் தூய்மை, எளிமை, தியாகம் என்றாலே காந்தியியத்தை உச்சரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். "காந்தியம்" என்ற அந்த உயர்ந்த த்த்துவத்தை "காந்தி" என்ற தனிமனிதர் ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டதன்று. இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான புடம்போட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மாளிகை அது.
இன்று ஜனவரி 2 லட்சுமண ஐயர் நினைவு நாள்.கோபியில் அந்தத் தூயவருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று ஆசை கொண்டு ஒரு அமைப்புப் பல ஆண்டாகப் போராடி வருகிறது.
கோபியின் மையப் பகுதியில் 40 ஏக்கர் நிலம் தந்தவருக்கு 10 அடியில் சிலை வைக்க இடமில்லை.பணமில்லை. மனமில்லை.
நம்மிடையே பொது வெளியில் உலவிய தூயவர்களை நாம் போற்ற மாட்டோம்;மதிக்கமாட்டோம். ஆனால், காந்தியை ஒமந்தூரை,காமராஜரை, ஜீவாவை,கக்கனைப் போல ஒருவரைப் பார்க்கமுடிவதில்லையே எனத் தொண்டை கிழியக் கத்துவோம். அங்கலாய்ப்போம். அருகில் இருப்பவரைக் கண்டுகொள்ளவே மாட்டோம்.

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…