Monday, February 20, 2023

இருக்கும் வரை வாழ்வை வாழ்ந்து தீர்த்துக்கொள்கிறேன் சற்றே விலகி இருங்களேன்

பிடித்தப் பாடலைக் கேட்பேன்
விரும்பிய உணவை உண்பேன்
நினைத்த நொடியில் புறப்பட்டு வெளிச்செல்வேன்
விருப்பம்போல் ஆடை அணிவேன்
கடற்கரையில் காலாற நடப்பேன்
உறக்கம் தொலைத்த இரவொன்றில் வானம் பார்த்து அமர்ந்திருப்பேன்
புத்தகங்கள் படிப்பேன்
படிக்காமலும் இருப்பேன்
அறையை என் விருப்பம் போல மாற்றியமைப்பேன்
மொட்டை மாடியில் பூச்செடிகள் வளர்ப்பேன்
மணிக்கணக்காய் ஆன்லைனில் இருப்பேன்
ஜன்னல் வழியே தூரத்துப்பறவைகளை வேடிக்கைப் பார்ப்பேன்
மழை நனைக்க சாலை நடுவே நடந்து வருவேன்
காய்ச்சல் கண்டு போர்வைக்குள் சுருண்டுக் கிடப்பேன்
அடிக்கடிக் கொள்கைகளை மாற்றிக்கொள்வேன்
திரையரங்கில் கூட்டத்தோடுக் கூட்டமாய் விசிலடிப்பேன்
கதவடைத்து ஆதங்கத்தை அழுதுத்தீர்ப்பேன்

இதுதான் 
சுதந்திரம் என்கிறேன் 

இல்லை 
நீ தனிமையிலிருக்கிறாய் 
என்கிறீர்கள்

தனிமையோ 
விடுதலையோ 
பெயர்களா அவசியம் 

இருக்கும் வரை
வாழ்வை 
வாழ்ந்து தீர்த்துக்கொள்கிறேன்

சற்றே 
விலகி இருங்களேன்

-ரிஸ்கா முக்தார்-


No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...