இந்த வைகோ கார்கில் போரில் வாஜ்பாயை ஆதரித்தவர் தான்.! பெரிய அமைதி புறா போல இப்போது பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று சொல்கிறார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து காஷ்மீர் பெகல்காம் பகுதிக்கு வந்த அப்பாவிச் சுற்றுலா வாசிகளின் உள்ளாடையை அவிழ்த்துப் பார்த்து மிகக் கொடூரமான முறையில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளார்கள். அதைச் சரி என்கிறாரா இந்த வைகோ? அதேபோல் இந்த பிபிசி என்கிற நிறுவனத்திற்கும் அதுமட்டுமல்ல வேறு சிலரான திருமாவளவன் சீமான் போன்றவர்களுக்கு என்ன வந்தது! தெரியாமல்த்தான் கேட்க வேண்டி இருக்கிறது! நீங்கள் எல்லாம் இந்தியாவில் தானே குடியிருக்கிறீர்கள்!? உங்கள் கட்சிகளை எல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தானே பதிவு செய்திருக்கிறீர்கள்! இந்திய அரசியல் சாசனத்தின் படி தானே நாடாளுமன்றத்தில் உறுதி எடுத்து இருக்கிறீர்கள்!
Tuesday, May 13, 2025
இந்த வைகோ கார்கில் போரில் வாஜ்பாயை ஆதரித்தவர் தான்.! பெரிய அமைதி புறா போல இப்போது பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று சொல்கிறார்.
பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்பவர்கள் இந்தியாவை காலி செய்து பாகிஸ்தானுக்கு போய் விடலாமே..
26 பேரை நிற்க வைத்து குடும்பத்தினர் முன்னிலையில் சுடும் போது இந்த மனிதாபிமானம் எல்லாம் தெரியவில்லையா ..
நீங்கள் எல்லாம் உங்கள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!? இன்றைக்கு ஆட்சியில் மோடி இருக்கலாம்! நாளைக்கு காங்கிரஸ் வந்து விடலாம்! எந்தக் கட்சி வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம்! ஆனால் நாடு என்பது நிரந்தர பூமி! இத்தனை வருடம் போராடுகிறீர்களே நீங்கள் இந்தியாவிலிருந்து தனித் தமிழ்நாடு வாங்கி விட முடியுமா!? அவ்வளவு ஒடுக்கப்பட்ட துயரப்பட்ட சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிறப்பான தேசிய இனமாக வாழ்ந்து வந்த மேலும் அதன் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்த தமிழர்களுக்கே தனி நாடு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது! 30 வருடங்களாக மனத் துயரத்தையும் வேதனையையும் நாம் அடைந்தோம்! இன்று வரை அது நடைபெறவில்லையே! நாடு இருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் கட்சி அரசியல் செய்து அதில் தங்களது பெயரும் அடிபட வேண்டும் என்பதற்காகப் பெருமை பேசுவது முழுக்க அபத்தமாக இருக்கிறது! இது அரசியல் கிடையாது! தேச நலன் மீதான அபாயம்! அதை உணராமல் தடியெடுத்த தண்டல்காரர்கள் மாதிரி பேசும் இவர்களை நாட்டில் உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும்!
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியது போல இவர்களின் நடிப்பு எந்த தேசிய அக்கறையுமற்ற சுயநலமாகி பதவி சுகத்தின் பிதற்றலாக இருக்கிறது! இது எல்லாம் வேடிக்கையாக நினைத்து தலையில் அடித்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டியதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment