Tuesday, May 13, 2025

நேருவின் இரண்டு கடிதங்கள்:


 #நேருவின் இரண்டு கடிதங்கள்:
__________
#1962-ஆம் ஆண்டு நடந்த சீன தாக்குதலின் போது நவம்பர் 19ஆம் தேதி அமெரிக்க அதிபர் கென்னடிக்கு இந்திய பிரதமர் நேரு இரண்டு கடிதங்கள் எழுதுகிறார். அந்தக் கடிதங்கள் இந்திய தூதரகம் வாயிலாக கொண்டு சேர்க்கப்பட்டன.
#அதில் இரண்டாவது கடிதத்தில் என்ன இருந்தது என்பது கடைசி வரை வெளிப்படுத்தப்படவில்லை.
#இரண்டாவது கடிதம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. அந்தக் கடிதம் அமெரிக்க அதிபரின் பார்வைக்கு மட்டுமே ('JN to JFK, Eyes Only' ) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அது அழிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
#நேருவிற்குப் பின் பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி, பிரதமர் செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்துப் பதிவுகளும் சோதனையிடப்பட்டதாகவும் ஆனால் அப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார்."
#ஆனால், 2010 ஆம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி ப்ரெசிடென்ஷியல் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் இந்தக் கடிதங்களை வெளியிட்டது.
#உங்களுக்கு முதல் கடிதம் எழுதிய சில மணி நேரங்களில் நெஃபாவில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. பிரம்மபுத்ரா பகுதியில் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து அனைத்தும் சீனாவின் வசமாகிவிடும்" என்று நேரு அந்த இரண்டாவது கடிதத்தில் எழுதியிருந்தார்.
#அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பி.கே.நேரு தனது சுயசரிதை 'நைஸ் கைஸ் ஃபினிஷ் செகண்ட்' (Nice Guys Finnish Second) என்ற புத்தகத்தில், "முதல் கடிதம் எங்கள் அணிசேராக் கொள்கைக்கு எதிரானது. இரண்டாவது கடிதம் மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது, அதைப் படித்த பின் என் வெட்கத்தையும் துக்கத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. '' என்று எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...