Monday, October 26, 2026

அமைதிக்கான #நோபல்பரிசு பெற்றிருக்கும் நவநீதம் பிள்ளை குறித்து என்னிடம் பலர்

 அமைதிக்கான #நோபல்பரிசு பெற்றிருக்கும் நவநீதம் பிள்ளை குறித்து என்னிடம் பலர்

பத்திரிகையாளர்கள உட்பட கைபேசியில் நீங்கள் நவிப்பிள்ளை தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைப் பின்னணியாக கொண்டவர் என்று சொல்கிறீர்களே! என்ன விபரம் என்று கேட்டார்கள்! உண்மை என்னவென்றால் இந்த நவி பிள்ளையுடைய பெற்றோர் குறிப்பாக அவர் ஆந்திரா பூர்வீகம்,தகப்பனார் பெயர் நாராயணசாமி நாயுடு அவரது மனைவி பெயர் சாந்தானம் நாயுடு. அவருக்குப் பிறந்த நவி பிள்ளை எனும் இந்த அம்மையார் சட்டக் கல்வி கற்று பன்னாட்டு சட்டங்களையும் அறிந்து பன்னாட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் இருந்தவர். இவர் திருமணம் செய்தது கேபை பிள்ளை என்பவர் திண்டுக்கல் வத்தலகுண்டுவில் இருந்து மூன்று நான்கு தலைமுறைக்கு மேல் தென் ஆப்பிரிக்கவில இவரின் தந்தை நாராயணசாமி நாயுடுவின மூதாதையரை போல புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பல தலைமுறையைச் சேர்ந்தவர்.. இந்த கேபை பிள்ளையைத் திருமணம் செய்ததால் தான் அவர் நவி பிள்ளையாக அவரது பெயரில் பின்னொட்டு சேர்க்கப்பட்டது!. இந்த அம்மையாருக்கு ஈஸ்வரி மற்றும் காமினி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். #ஈழத்தமிழர், ரூவாண்ட என பல இனபடுகொலையை இன வன்கொடுமை என்று சொல்லி அது சரியாக உலக மன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்னவர்.இரண்டு தரப்பிலும் படுகொலைகள் நடந்திருக்கின்றன என்று அவர் சர்வதேச மன்றங்களில் குற்றச்சாட்டினார். மேலும் யுத்த காலங்களில் பெண்ணுடல் மீது நிகழும் வன்முறை என்பது எந்த நாட்டிற்குமான யுத்த வெற்றியாகக் கருதப்படக் கூடாது என்பதை கடுமையாகச் சாடிச் சொன்னார். டெசோ மாநாடுகளின் போது குறிப்பாக இலங்கைப் பிரச்சனைகளைச் சட்டப் பூர்வமான தேசிய இன உரிமைகளாக நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று என்னிடம் அவர் தெரிவித்தார். டெசோ மாநாடுகளின் போது ஈழத் தமிழர் பிரச்சனையில் திமுகவை இணைத்துக் கொண்டு நான் செய்த முயற்சிகள் அனைத்தையுமே திமுக மறைத்து விட்டது. வாழ்க திமுக! வாழ்க ஸ்டாலின் குடும்பம்!!



No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...