Monday, October 26, 2026

படேல் இன்று எங்கே⁉️ அஅதுபோலவே கரப்பான்பூச்சிகள

 #கன்னையாகுமார் #அண்ணாஹசாரே #குஜராத்ஹர்திக் படேல் இன்று எங்கே⁉️ அஅதுபோலவே கரப்பான்பூச்சிகள

#CJP —————————————————— கடந்த காலங்களில் கன்னையா குமார் (Kanhaiya Kumar) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பரபரப்பாக போராடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின் காங்கிரஸில் சேர்ந்தார். அதுபோலவே அண்ணா ஹசாரே, குஜராத் ஹர்திக் படேல் போன்ற இவர்கள் இன்றைக்கு எங்கே உள்ளனர்.அப்படித்தான் இந்த CJP டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முன் நிற்கும் துருவ்ரத்தி ஜெர்மனியை பிறப்பிடமாக கொண்டவர். சி ஜேபி யைச் சேர்ந்த அபிஷித் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியாத ஒரு ஆள்! நேஹா போரா ஒரு கம்யூனிஸ்ட்! நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தைத் தவிர வேறு மாநிலங்களில் வந்து வீண் அரசியல் செய்து கொண்டிருப்பவர்! காவேரி பிரச்சனை தொடர்பாக தமிழக சார்ந்த உரிமைகள் குறித்து பேசவே மாட்டார். ராகுல் காந்தி ஒரு கோமாளி…. சரி! இங்கே கம்யூனிஸ்கள் போராடுகிறார்கள்! அண்டை நாடான சீனாவில் போராட்டக்காரர்களை அந்தக் கம்யூனிஸ்ட் அரசு எவ்வாறு ஒடுக்கியது சுட்டுக் கொன்றது மாதிரி அதையே இந்தியாவில் செய்தால் இந்தியக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்வார்களா? இந்தியாவை வலதுசாரிகள் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே சீனாவின் ஆட்சியாளர்கள் எல்லாம் இப்போது வலதுசாரிகள் இல்லையா? அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அமைச்சரும் பல கோடி சொத்துக்கள் உள்ளவர்களாக அங்கே இருக்கிறார்கள்! தங்கள் வாரிசுகளுக்கும் உரிமை கோருகிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இந்தியா போன்று வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த தேசிய நாடுகளில் வேண்டுமென்றே கலகங்களை உருவாக்குவதற்காக சில குறிப்பிட்ட சக்திகளை தூண்டும் சர்வதேச வணிகப்பின்னணிகளும் அதன மூலதனமும் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இப்படியான கைக்கூலிகளை ஏவி விடுகிறது. இவை பொது வெளியில் போராட்டம் போன்ற ஒரு கேளிக்கையாக மாறிவருவதைப் பார்த்தபடி இருக்கிறேன். குறிப்பிட்ட நலன்களைப் பெற்றுவிட்டபின் இதைத் தூண்டிவிட்ட இந்தக் கூட்டங்கள் இந்திய அரசியலமைப்பில் பின் நாட்களில் தோன்ற மாட்டார்கள்! ஏவியவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.! நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்! நேற்று ஜாமீன் பெறுவதற்காக அபிஜீத் திப்கே சில பல கடுமையான நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இனி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது. -சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களைத் தூண்டிவிடக் கூடாது. -10 முதல் 15 பேரைக் கூட்டிக்கூட போராட்டங்களை ஏற்பாடு செய்யக் கூடாது. அவர் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடுவது இது இரண்டாவது முறையாகும். அவர் மீண்டும் இதை மீற முடியாது ஏன் ஒவ்வொரு நாளும் அனைவரின் ராஜினாமாவையும் கோருகிறீர்கள் என்றும், மக்களைத் தூண்டிவிட்டு அரசியல்வாதியாக விரும்புகிறீர்களா என்றும் கேட்டார். மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவு இருப்பதால் அவர் விரும்பியதை எல்லாம் செய்யலாம் என்று அர்த்தமா என்றும் நீதிபதி எச்சரித்தார்.




No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...