Friday, October 16, 2026

Oct 4, 2025 கரூர் துயரச்சம்பவத்தின் அடிப்படையில் திமுக தரப்பில் நிகழ்ந்த மற்றுமொரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

 கரூர் துயரச்சம்பவத்தின் அடிப்படையில் திமுக தரப்பில் நிகழ்ந்த மற்றுமொரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நொடியே எப்படி திமுக தரப்பில் மருத்துவமனை உள்ளிட்டு எல்லோரும் தயாராக இருந்தார்கள் என்பதோடு உடனே முதல்வர் ஸ்டாலின் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக் கமிஷனுக்கு உத்தரவிட்டதும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. இந்த அருணா ஜெகதீசன் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் விசாரணைக் கமிஷன் தலைமை நீதிபதியாக விசாரித்து அவர் அளித்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை என்ன ஆனது என்றும் தெரியவில்லை. கருர் சம்பவத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்தும் அதே மாவட்ட டிஐஜி இடம் இருந்தும் அறிக்கை வாங்காமலே உடனே விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டால் என்ன அர்த்தம்.? இப்படி பல அவசரமான முன் முடிவுகள் திமுக தரப்பில் எடுக்கப்பட்டிருப்பது குறித்து சந்தேகப்படத்தான் வேண்டியிருக்கிறது. எல்லோரும் ஏன் இவ்வளவு தயாராக இருந்தார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. .#KarurStampedeTragedy #கரூர்_பெருந்துயரம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...