தமிழ்நாட்டில் நடந்த இந்த இடைத்தேர்தல்களின் முடிவைப் பார்க்கும் பொழுது ஏறக்குறைய ஜோசப் விஜய்யின் கரிஷ்மா என்று சொல்லக்கூடிய கவர்ச்சி முடிந்து போனதாகத்தான் கொள்ள வேண்டும்!
ஒரு காலத்தில் 39 நாடாளுமன்ற சீட்டுகளையும் ஜெயித்த ஸ்டாலினை வருங்கால இந்தியப் பிரதமர் என்று அவரது கட்சிக்காரர்கள் வர்ணித்து இந்தியாவை ஸ்டாலின் தான் ஆள வேண்டும் என்பது மாதிரி மிகையாகப் பேசி மிகையாக மட்டுமல்ல அபத்தமாகவும் பேசிக் கொண்டாடினார்கள்! அதேதான் ஜோசப் விஜய் தமிழ் தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயித்தவுடன் அவர்தான் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக போகிறார் என்று அவரது அணுதாபிகள் முட்டாள்த்தனமாக அபிப்பிராயங்களை உதிர்தது மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் கூச்சலிட்டார்கள்! அற்புத தனமான பைத்தியக்காரர்களின் கூட்டம். எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது ஸ்டாலினும் விஜயும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு எல்லையைக் கடக்க முடியாத பலவீனமான நிலையை அடைந்து விட்டார்கள்! இது மாதிரியான தமிழகக் கூச்சல்களை இந்தியா முழுக்கக் கொண்டு போக முடிந்தவர்களின் அறியாமையை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது! ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு பிச்சை எடுக்க என்கிற நிலையில் இந்த தமிழக திமுக மற்றும் தவெ க கட்சிகள் மற்றும் 1967 க்கு பிறகு ஒருபோதும் இழந்த ஆட்சியைப் பிடிக்க முடியாத கழுதை தேய்ந்து கட்டெறும்பான காங்கிரஸ் கட்சி மற்றும்ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் முட்டுக் கொடுத்தே வாழும் இடதுசாரிகள் அனைவரும் கருணாநிதி பாடிய காகிதம் ஓடம் கடல் அலை மேலே பயணிக்கிறார்கள். ஒரு தேசத்தின் ஆன்மா மற்றும் அதன் நலன்கள் என்பது இது மாதிரியான தனிப்பட்ட கொள்கைகளால் உருவாகாது! அது அதன் நிலத்தில் காலூன்றி நிற்க பெரும் இறையாண்மை வரலாற்றை நம்பியுள்ளது.இந்த சில்லறைத் தனமான அபிலாசைகள் அதன் முன்பு முடிவுக்கு வந்துவிடும். கொள்கை என்று வரும் பொழுது அனைத்து கட்சிகளும் அதற்கான நடைமுறைகளில் தோல்வி அடைவதை என் அரசியல் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். வலிமை என்பது அரசியலில் பெரும் தியாகம். இந்த ஆங்கில புத்தகத்தை எழுதியவர் இப்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
OCT 18 2026
Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...

No comments:
Post a Comment