இளைஞர்களின் குரல்களை அடக்க முடியாதாம்!
ஸ்டாலின் சொல்கிறார். வேடிக்கை! டெல்லியில் கைதான அசுதோஷ், ரான்கா மற்றும் சௌரவ் தாசுக்கு திமுக முழுச் சட்ட ஆலேசனையை வழங்குமாம்! திமுகவுக்கு சட்ட ஆலோசனயை வழங்க ஆள் இல்லாமல் கோடி கணக்கில் டில்லி வழக்கறிஞர்களுக்கு ஆட்சி காலத்தில் கிடைத்த பணத்தை வாரி வழங்கினர். இவர்கள் உதவிகள் எல்லாம் என்ள ஆகும் என தெரியதா? திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி கைதி மற்ற நிகழ்வுகளில் தவறான சட்ட ஆலோசனகள் நடந்தது ஊர் அறிந்தது. தென்ன மரத்துல தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுகிறது! டெல்லி ஜந்தர் மந்தர் காக்ரோச் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குகிறேன் என்கிற பேரில் இப்படி வேடிக்கையாக பேசி இருக்கிறார் ஸ்டாலின்! .கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் ஸ்டாலின்!உங்கள் ஆட்சிக்காலத்தில் உங்கள் மீது விமர்சனம் வைத்தவர்களை நீங்கள் மலர்ப் பாதை போட்டா வரவேற்றீர்கள்! எத்தனை பேரை நீங்கள் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்தீர்கள்!. இப்பொழுது மட்டும் என்ன ஞானோதயம் உங்களுக்கு வந்திருக்கிறது! அவர்களுக்கு எல்லாம் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது! அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா! உங்கள் ஆட்சியில் உங்களுக்கு எதிராக நடந்த எத்தனை போராட்டங்களில் எத்தனை பேரை உள்ளே வைத்தீர்கள் என்பதைத் திரும்பிப் பாருங்கள். இல்லை நான் கேட்கிறேன் உங்களுக்கு ஏதாவது இந்திய அரசியல் குறித்த கடந்த கால வருங்கால எதிர்காலப் புரிதல்கள் இருக்கின்றனவா! இல்லை உங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதாவது தெரியுமா!? ஆட்சியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நீங்கள் தண்டனை வழங்குவீர்கள்! ஆனால் அதையே வேறு யாராவது செய்தால் மக்கள் சக்தி என்று பசப்புவீர்களா!? அதிகாரத்தில் இருக்கும் போது தங்களுக்கான ஒரு பேச்சு! இல்லாத போது மக்களுக்கான பேச்சு!! நீங்கள் என்ன பேசுவீர்கள்! உங்கள் ஜனநாயக மாண்பு என்ன என்பது எனக்குத் தெரியாதா!? #cjp #sir #rahulgandhi #jantarmantar #dmk #ksradhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 14-10-2026
Subscribe to:
Post Comments (Atom)
OCT 18 2026
Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...
-
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...

No comments:
Post a Comment