Friday, October 16, 2026
Oct 5, 2025 Oct 5, 2025
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. நாளை சென்னைக்கு வரும் பாண்டா…. இது ஒரு புறம் இருக்கட்டும்…….
தவெக தலைவர் விஜய் கரூரில் நிகழ்ந்துவிட்ட கோர சம்பவத்திற்குப் பதிலாக நான்கு நிமிட ட்வீட் ஒன்றை போட்டு ஊடகங்களில் தன்னிலை விளக்கம் தந்துள்ளார். இத்தனை மாநாடுகள் தான் நடத்திய போது நிகழாத சம்பவங்கள் கரூரில் மட்டும் ஏன் நிகழ்ந்தது என அதில் கேட்டுள்ளார்.
இவ்வாறாக அவர் பொறுப்புக் கூறுவது அவருக்கு பின்னால் இருக்கும் பொறுப்பற்றவர்களை பற்றிய கவன மாக இல்லை என்பதுதான் முதிர்ச்சியற்ற நிலையாக இருக்கிறது . தங்களுடைய நிர்வாகிகள் சரியாகத் திட்டமிடாததால் தான் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது இனி இவ்வாறு நடக்காது என்று சொல்வதற்குப் பதிலாக நிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அதற்கு சப்பை கட்டைக்கட்டுகிறார்.
இந்த சம்பவங்களுக்கு முன்பாக ஏற்கனவே சில மாநாடுகளை நடத்தி முடித்து விட்டபின் பிரச்சாரச் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் வீக் எண்ட் ட்ரிப் ஒன்றை விஜய் திட்டமிட்டது அவரைப் பொறுத்தளவு சரியானதாக இருக்கலாம். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்லாயிரம் பேர் கூடினார்கள். அன்றைக்கு அவர் நடத்திய அந்த ரோடு ஷோவில் அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்த ரசிகர்கள் பலரும் அவரது வாகனத்தின் மீதே மோதி விபத்தில் சிக்கியிருந்தார்கள் என்பது அவருக்கு தெரியுமோ என்னவோ? மயக்கம் அடைந்தவர்கள் மட்டும் 12 பேர். அன்றைய தினம் அரியலூரில் அவர் பேசும்போது மேலும் 6 பேர் மயக்கம் அடைந்தார்கள். அடுத்த வாரம் திருவாரூரில் 17 பேரும் நாகப்பட்டினத்தில் ஐந்து பேரும் விபத்திற்கும் மயக்கத்திற்கு உள்ளானார்கள். அந்த வகையில் அவர் சொல்வது போல கரூரில் மட்டும் முதன் முறையாக இந்தத் துயரங்கள் நிகழ்ந்ததாகச் சொல்வது சரி இல்லை. விஜயின் முந்தைய மீட்டிங்கில் இறந்தவர்கள் எண்ணிக்கை: மதுரை-6, திருவாரூர்-6, திருச்சி-3, அரியலூர்-3, நாமக்கல் -9, கரூர்-41
என்றும் சிலர சொல்கின்றனர்.
ஊடகங்கள் யாவும் திமுக வசத்தில் உள்ளதால் எது உண்மை என தெரியாமல் இருக்கிறது. சில ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
இவையெல்லாம் சொன்ன நேரத்திற்கு அவர் வராததால் நேர்ந்தது. மட்டுமல்லாமல் இடங்களின் தேர்வு மக்கள் கூடுகிற எண்ணிக்கை எவ்வளவு பேர் வருவார்கள் என்கிற முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லாத தன்னை மட்டும் ப்ரொமோட் செய்கிற ஊது வாயர்களை வைத்துக்கொண்டு மக்கள் முன் தோன்றுகிறார். அவர்கள் “அதோ வருகிறார் இதோ வருகிறார் என்று கட்டியம் கூறுகிறார்கள்”. அது கூட்டத்தில் முந்திக்கொண்டு அவரைப் பார்க்க முயலும் போது மிக ஆபத்தாக முடிகிறது.
எவ்வளவு மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டார்கள் என்று இன்றைய சமூக வலைத்தளங்கள் பத்திரிக்கைகள் எடுத்துச் சொல்கின்றன. காவல்துறை கடுமையாக நிபந்தனை போடுகிறார்கள் என்று விஜயின் துணைப் பொது செயலாளர் நிர்மல் குமார் போட்ட வழக்கில் “தலைவராக இருக்கும் நீங்கள் தான் வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் ஏதாவது அசம்பாவிதம் யார் பொறுப்பேற்பது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அவரிடம் கேட்டதும் நடந்திருக்கிறது.
நான் சொல்ல வருவது என்னவென்றால் இவ்வளவு மக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் விஜயின் மீது தீவிரமான மதிப்பும் அவருக்குரிய அரசியல் இடத்தையும் ஏற்றுக் கொண்டும் அவருக்கு ஆதரவாகத் திரளும் போது உண்மையில் தமிழக அரசியலில் மாற்றங்கள் வருவதற்கான அறிகுறியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. அதை முறையாக விஜய் கட்டுப்படுத்தி நிதானமாக நிறைவேற்ற வேண்டும்.
எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேறிய போது மட்டுமல்லாமல் பொதுமக்களை சந்திக்கும் போது அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான உரிய இடங்கள் அதேபோல சாலையில் பயணிக்கும் பொழுது இருபுறமும் மக்களுக்கான பாதுகாப்பு கட்டைகளைக் கட்டுதல் போன்றவற்றின் வழியே கைகளை ஆட்டிய படியே செல்வார். திறந்த வேனில் நின்றபடி ஒரே ஒரு உதவியாளர் ராமகிருஷ்ணனை வைத்துக் கொண்டுதான் தனக்கு விழாக்களில் அணிவித்த மாலைகளை வீசி எறிந்தபடி கைகளை எடுத்து மக்களை வணங்கியவாரே செல்வார்.
அவருடைய சினிமா அனுபவமும் அரசியல் அனுபவமும் ஒன்றிணைந்து மக்களின் காவலனாக தனது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை தனது கட்டுக்குள் கொண்டு வந்து பிறகு தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய தலைவர்களை இணைத்து கட்சியைப் பலப்படுத்தி அதை ஓட்டு வங்கியாக மாற்றி முதன் முதலாக திண்டுக்கல்இடைத்தேர்தலில் அவர் ஜெயித்த போது ஏறக்குறைய அண்ணா திமுக என்ற கட்சி உறுதியாகிவிட்டது.
அதன்படி இல்லாவிட்டாலும் விஜய் தனக்கு பின்னால் இருக்கக்கூடிய திறமையற்ற முன்கூட்டியே யோசிக்காத அடிப்படை தேவைகளை செய்து வைத்து விட்டுத் தான் கூட்டத்தை திரட்ட வேண்டும் என்ற புத்திசாலி தனம் எது மற்ற அல்லது அவரது தீவிரமான ரசிகர்களை வழி நடத்தக்கூடிய ஆங்காங்கே பொறுப்புள்ள நிர்வாகிகளை உருவாக்கி விடவும்1/2
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment