Wednesday, October 5, 2016

அரசியலில் திறந்த உரையாடல்கள்

அரசியலில் திறந்த உரையாடல்களின் அவசியம் எப்போதுமே ; ஆனாலும், அவை சாத்தியப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் என்பது வெகு சிலவே. அதுதான், புதிய நம்பிக்கைகளோடு புதிய அரசியல் பாதையை இடுவதற்கும் உதவும். ஆனால், அதற்கு தங்களுக்குள் முரண்படும் கட்சிகளும் தலைவர்களும் அவர்கள் சார்பானவர்களும் உளமாரத் தயாராக இருக்கின்றார்களாக என்றால் 
‘இல்லை’ என்றே பதில் கிடைக்கின்றது. ஏனெனில், திறந்த உரையாடல் என்பது பல நேரங்களில் தங்களது ஆளுமைக் குறைபாட்டினையும், அரசியல் 
குயுபுத்திகளையும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதலாகும். ஆனால், இப்படியானவர்களையெல்லாம் சமாளித்து ஒரு திறந்த கலந்துரையாடலை ஒருங்கிணைத்தால், அங்கு கட்சிகளின் தலைவர்களின் ஆதரவாளர்கள் அடிப்பொடிகளின் கூச்சல் குழப்பங்களினால் ஆக்கபூர்வமான தருணங்கள் அலைக்கழிக்கப்படும். அல்லது, கருத்துக்களை அனுமதிப்பதற்கான மனநிலை இல்லாதவர்களின் துடுக்குத் தனங்கள் ஒட்டுமொத்தமாகப் பின்நோக்கி இழுத்து விடுகின்றன. 

அரசியல் என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் அல்ல. கொள்கையை வென்றெடுப்பது என்று சொல்ல வேண்டும். இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு காலத்தில் கொள்கை பேசிய கூட்டங்கள் தான் என்றும் சொல்ல வேண்டும். கொள்கை மோதல்கள், தர்க்க விவாதங்களை நோக்கி தமிழக அரசியலைத் திருப்பினால் தான் அரசியல் மேம்படும். 
ஆரோக்கிய விவாதங்கள் அவசியம் 
ஜனநாயகத்தில்...
Ancient Athens. City States.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...