மெசபடோமியா நாகரிகம் தொன்மையான நாகரிகம். இவை ஈரான், ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பகுதியே மெசபடோமியா. கி.மு. 3000 வாக்கில் ஜாவா அணை என்று கட்டப்பட்டது. இது ஜோர்டான் நாட்டில் கட்டப்பட்ட உலகின் மிகவும் பழமையான அணை. தற்போது உபயோகத்தில் இல்லை. வரலாற்று சின்னமாக, கற்கள்க் குவியலாக இன்றைக்கு இருக்கின்றது. இதற்கு அடுத்து சாத்தல் கபாரா அணைதான் கட்டப்பட்டது. இது கெய்ரோ நகரில் கி.மு. 2600ல் கட்டப்பட்டு அதுவும் இடிபாடுகளோடு வரலாற்று சின்னமாக திகழ்கின்றது. ஏமன் நாட்டில் கிரேட் டாம் ஆஃப் மெரிட் என்ற அணை கி.மு. 1700ல் கட்டப்பட்டு அதுவும் இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. இப்படி பல அணைகள் மத்திய கிழக்கு நாடுகளில் கட்டப்பட்டு இன்றைக்குப் பயன்பாட்டில் இல்லை. காவிரியின் குறுக்கே கி.மு. 200ல் கல்லணையைக் கட்டினார். 15 அடி உயரம், 66 அடி அகலம், 950 நீளம் என வலுவான அணை கட்டப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் கட்டப்பட்ட அணைகளுக்கு அழிவு ஏற்பட்டாலும், கல்லணை இன்றும் பலமாக உள்ளது. தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
#சாத்தல்கபாராஅணை #நீர்மேலாண்மை #ksrposting #ksradhakrishnanposting
#சாத்தல்கபாராஅணை #நீர்மேலாண்மை #ksrposting #ksradhakrishnanposting
No comments:
Post a Comment