Thursday, October 20, 2016

S M சுப்பையா நாயுடு.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 
S M சுப்பையா நாயுடு.

தென்னிந்திய திரை இசை உலகில் "சந்கீதையா" என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். தனது பாணியை கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் இசையமைத்தவர். இது அவரது நூறாவது நினவு ஆண்டு.

இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த MUSIC CONDUCTORம் கூட. இவரது மெட்டுக்கள் அனைத்தும் உடனடி HITS ஆக விளங்கின. J P சந்திரபாபுவை குங்குமப்பூவே பாடலின் மூலம் ஒரு சிறந்த பாடகராக உருவாக்கினார். இவரது இசையில் எஸ் ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா பாடல் பெரும் புகழ் பெற்ற பாடல். இன்றும் ஜானகி அவர்கள் இந்தப் பாடலைத்தான் தனது தலைசிறந்த பாடலாக குறிப்பிடுகிறார்.

முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ராஜகுமாரி என்ற படத்தில் M N நம்பியாருக்காக திருச்சி லோகநாதன் பாடிய காசினி மேல் நாங்கள் என்ற பாடல்.

இவரது இசையில்தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய முதல் பாடலான கலங்காதிரு மனமே என்ற பாடல் 1949ல் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் K V ஜானகி பாடியது.

.M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி, G K வெங்கடேஷ் போன்றோர் இவரிடம் உதவியாளர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது
 
இவரது இசையில் பாடிய பாடக நடிகர்கள்:
P U சின்னப்பா, C ஹொன்னப்ப பாகவதர், N C வசந்தகோகிலம், U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V நாகைய்யா, N S கிருஷ்ணன், T A மதுரம், P பானுமதி, S வரலக்ஷ்மி, J P சந்திரபாபு ஆகியோர்.

இவரது இசையில் பாடிய பிரபல  பாடகர்கள்:
C S ஜெயராமன்,T M சௌந்தரராஜன், கண்டசாலா,A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T A மோதி, P B ஸ்ரீனிவாஸ், S C கிருஷ்ணன், A L ராகவன்,  M L வசந்த குமாரி, P A பெரியநாயகி, P லீலா, ஜிக்கி, T V ரத்தினம், A P கோமளா , ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, P சுசீலா, K V ஜானகி, S ஜானகி,, L R ஈஸ்வரி போன்றோர்.

இவரது சில பிரபல பாடல்கள்:
திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே. 
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - மலைக்கள்ளன், 
தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன், 
சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை, 
நீ எங்கே என் நினைவுகள் அங்கே - மன்னிப்பு, 
மாலை மயங்குகிற நேரம், பச்சை மலை அருவியோரம் - மரகதம், 
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை - அன்னையின் ஆணை, 
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே - தாயின் மடியில், 
கண்ணில் வந்து மின்னல் போல் - நாடோடி மன்னன், ஆகிய சில.

இவர் இசையமைத்த படங்கள் சில:
மனோன்மணி, ஸ்ரீ முருகன், வால்மீகி, ராஜகுமாரி, அபிமன்யு, கன்னியின் காதலி, வேலைக்காரி, ஏழை படும் பாடு, திகம்பர சாமியார், மர்மயோகி, மலைக்கள்ளன், வாழ்விலே ஒரு நாள், நாடோடி மன்னன், அன்னையின் ஆணை, திருமணம், மரகதம், அதிசயப் பெண், திருடாதே, கொஞ்சும் சலங்கை, கல்யாணியின் கணவன், தாயின் மடியில், ஆசை முகம், நாம் மூவர், நாலும் தெரிந்தவன், பணக்காரப் பிள்ளை, ஐந்து லட்சம், மன்னிப்பு, தலைவன், இலங்கேஸ்வரன் போன்றவை.

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...