Saturday, October 29, 2016

திரும்ப வராத கடன்

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப கொடுக்காத
பெரும்புள்ளிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என வழக்கு

தலைமை நீதிபதி 
டி.எஸ். தாக்கூர்அவர்களின் அமர்வு
முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. 57 பேர்
கொண்ட ஒரு பட்டியல் சீல் இட்ட கவரில் ரிசர்வ் வங்கி கோர்ட்டில் ஒப்படைத்தது. ரகசியமான விஷயம் .நீதிபதி மட்டுமே பார்க்க
பட்டியலை கொடுத்திருக்கிறது.

57 மாபெரும் கொள்ளைக் காரர்களிடமிருந்து மட்டுமே
வர வேண்டிய மொத்த கடன் தொகை –
85,000 கோடிக்கு மேல்.
இது 500 கோடிக்கு மேல் உள்ளவர்களின் பட்டியல் .500 கோடிக்கு கீழே உள்ள வராத கடங்காரர்களையும் சேர்த்தால், திரும்ப வராத கடன் தொகை ஒரு லட்சம் கோடியை தாண்டும்.

இந்த கடங்காரர்களின் பட்டியலை இதுவரைநீங்கள்ஏன் வெளிப்படுத்தவில்லை என்று கேட்டக
ரிசர்வ் வங்கியின் வழக்குரைஞர் ,
” ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களின் நோக்கமல்ல…
அவர்களின் இயலாமை தான் காரணம்…. மேலும் அவர்களின்விவரங்களை வெளியிட சட்டம் இடம் கொடுக்கவில்லை…
5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கியவர்களின்
பெயர்களையும், பெண்களாயிற்றே என்று கூட பார்க்காமல்

புகைப்படங்களையும், பத்திரிகைகளில் விளம்பரங்களாக வெளியிடும் வங்கிகள்,
வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திரும்ப கொடுக்காமல்
ஏமாற்றுபவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ
வெளியிடக்கூடாது என்று எந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது..?
ஒரு வேளை அப்படி ஒரு சட்டம் இருந்தால் அது –
கோடிக்கணக்கில் ஏமாற்றுபவர்களை மட்டும் தான் பாதுகாக்குமா…? வீட்டுக்கடனை உரிய நேரத்தில் திரும்ப
கொடுக்க தவறும் சாமான்ய மக்களை அந்த சட்டம் பாதுகாக்காதா…?

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...