Sunday, October 23, 2016

'Silver Jubilee Selection' of 'Madras Musings'

மெட்ராஸ் மியூசிங்க்ஸ், வரலாற்று ஆய்வாளர் திரு. எஸ். முத்தையா அவர்களின் முயற்சியில் சென்னை ஹிக்கிம் பாதம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அமால்கமேஷன் குழுமம், அசோக் லேலேண்ட், பேட்டா, தி ஹிந்து, முருகப்பா நிறுவனம், பிரேக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், சுந்தரம் பைனான்ஸ், ஸ்பிக் நிறுவனம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, ரானே, செய்ன்ட் கோபியன், சன்மார், நிப்போ, யுசிஏஎல், தாஜ் ஓட்டல் குழுமம், லோக்வானி போன்ற பிரசித்திபெற்ற நிறுவனங்கள் உதவியில் சென்னை நகரின் வரலாறு, தொன்மை, பழமையைப் பற்றி அறியக் கூடிய கட்டுரைகள் அடங்கிய மாதம் இருமுறை இதழ் 1991லிருந்து வெளிவருகின்றது. இது எந்தவித லாபம், பலன் எதிர்பார்க்காமல் நடத்தப்படுகின்ற மக்களின் இதழாக திகழ்கின்றது. இதன் 25 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி இதுவரை இந்த இதழில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளை தொகுத்து 'Silver Jubilee Selection' of 'Madras Musings' சிறப்பு மலராக அரியப் புகைப்படங்களோடு, வடிவமைக்கப்பட்டு, பைண்டிங் செய்யப்பட்டு அருமையான விலை உயர்ந்த காகிதத்தில் அழகாக அச்சடிக்கப்பட்டு, மலிவு விலையில் ரூ. 500க்கு வெளிடப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ளது.

இதை ஆசிரியர் குழு திரு. எஸ். முத்தையா, வி. ஸ்ரீராம், ரஞ்சிதா அசோக் ஆகியோர் தொகுத்துள்ளனர். சென்னையை மட்டும் அல்ல, தமிழக வரலாற்றில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய ஒரு அருமையான பொக்கிஷம் ஆகும். இந்த சிறப்பு தொகுப்பில் என். சங்கர், எஸ். முத்தையா, கார்த்திக் பட், ராதா கோபாலகிருஷ்ணன், எஸ்.ஆர். மது, வி. ஸ்ரீராம், ஷோபா மேனன், ஆர். சந்திரசேகர், சுசிலா நடராஜ், அம்பிகா சந்திரசேகர், வினோதா ராம்மோகன், ரஞ்சிதா அசோக், டாக்டர் என். பட்டாபிராமன், பி.சி. ராமகிருஷ்ணா, ராண்டர் கை, வி.ஆர். தேவிகா, கோபாலகிருஷ்ண காந்தி, எஸ். கிருஷ்ணன், விஜயஸ்ரீ வெங்கட்ராமன் என பலரின் எழுத்துவன்மை பிரமிக்க செய்கிறது. இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகளை தமிழ் கூறும் நல்லுலகம் சொல்ல கடமைப்பட்டுள்ளது. இதைப் பற்றி தின ஏடுகளில் எந்த செய்தியும் வரவில்லை என்றாலும், இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய செயலாக உள்ளது. இன்றைய சென்னை, நேற்றைய சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம், மெட்ராஸ், எப்படி அக்காலத்தில் இருந்தது பற்றி தரவுகளோடு நாம் அறிந்துகொள்ள இந்த வரலாற்று ஆவணத்தை நமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லவேண்டியது நமது அடிப்படை கடமையாகும். இந்தியாவின் வரலாறு தென் திசையிலிருந்து எழுதப்பட்டிருக்கவேண்டும். அது செய்யப்படவில்லை. அது வரலாற்றுப் பிழை. மனித இனம் தோன்றியது தமிழ் மண்ணில். நமக்கான பண்டைய வரலாறுகளை பதிவு செய்து ஆவணப்படுத்த கடந்த நூற்றாண்டுகளில் தவறிவிட்டதால் பல செய்திகள் புலப்படாமல் போய்விட்டன. இன்றைக்கு கீழடி பிரச்சினைக் கூட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பிதான் பாதுகாக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கன்றோம். நெல்லைச் சீமையில் ஆதிச்சநல்லூர் அகழ் ஆராய்ச்சியை தோண்டிவிட்டோம். பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கான ஆய்வு அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை என்பது வேதனையான செய்தி. அந்த வகையில் மெட்ராஸ் மியூசிங்க்ஸ், சென்னையைப் பற்றிய வரலாற்று செய்திகளை அக்கறையோடும், கவனத்தோடும் பார்த்தவுடன் படிக்கவேண்டும் என்ற நிலையில் எழுதப்பட்ட கட்டுரைகள் யாவையும் பாதுகாத்தால் எதிர்காலத்தில் வரலாற்று ஆவணங்களாக நமக்குப் பயன்படும்.  வாழ்க மெட்ராஸ் மியூசிங்க்ஸ் பணிகள்.


As observed by Mr N. Sankar in his ‘foreword’, this edition is a collector’s item.

Generally a newspaper is read not from start to finish; rather the readers read only the topics that interest them. But ‘Madras Musings’ is an exception.

The articles chosen from your impressive journey over a period of Twenty Five years are an interesting mix. It must have been a very challenging tank.

I don’t know who the man from Madras Musings is, but love reading his jottings.

May your fortnightly grow further and become a guide post to the preservation of our heritage buildings. But for your initiative, we would have lost many landmark buildings to the so called ‘City improvement scheme’.

We are still bogged down by several civic issues and I hope you continue to be the voice of the city and those who love this city and its culture.

#சென்னை #மெட்ராஸ் #மெட்ராஸ்மியூசிங்க்ஸ் #மதராசப்பட்டினம் #chennai #madras #madrasmusings #ksrpostings #ksradhakrishnanpostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...