கன்னியாகுமரி தமிழகத்தோடு
இணைப்பு போராட்டம்
------------------------------------
புதுக்கடைதுப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்-11/8/1954.
**************************
தொடுவட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள்
***********************
1. திரு. எஸ். ராமைய்யன், மேக்கன்கரை, ஆயிரம் பிறை
புத்தன்வீடு, நட்டாலம், விளவங்கோடு வட்டம்.
2. திரு. எ. பொன்னைய்யன் நாடார், அணைக்கரை,
தேமானூர், ஆற்றூர், செங்கோடி அஞ்சல், கல்குளம் வட்டம்.
3. திரு. எம். பாலைய்யன் நாடார், கொச்சுக் காரவிளை,
மணலி, சாரோடு், தக்கலை அஞ்சல், கல்குளம் வட்டம்.
4. திரு. எஸ் குமரன் நாடார், கோடிவிளை வீடு,
தோட்டவாரம், குன்னத்தூர் கிராமம், புதுக்கடை
அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
5. பெயர் தெரியாத ஒரு தாய், சந்தை வியாபாரம் செய்த
மூதாட்டி.
6. திரு. சி. பப்பு பணிக்கர், மரக்கறிவிளாகத்து புத்தன் வீடு,
காளைச்சந்தை, தொடுவட்டி, மார்த்தண்டம் அஞ்சல்,
விளவங்கோடு வட்டம்.
புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்
*************************************
1. திரு. எ. அருளப்பன் நாடார், வண்ணான்விளை வீடு,
பைங்குளம் கிராமம், புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
2. திரு. என். செல்லைய்யா பிள்ளை, (செக்காலை)
R.C.கிழக்குத்தெரு, புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
3. திரு. எஸ். முத்துசுவாமி நாடார், நாயக்கம் முள்ளுவிளை
வீடு, சடையன் குழி, கிள்ளியூர் அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
திரு. எ. பீர்முகமது, புதிய வீடு, அம்சி, தேங்காபட்டணம்
அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
5. திரு. முத்து கண்ணு நாடார், புதுக்கடை அஞ்சல்,
விளவங்கோடு வட்டம்.
1948-துப்பாக்கிச் சூட்டில் உயிர் துறந்தவர்கள் ்
******************************
1. எ. தேவசகாயம் நாடார், S.T. மங்காடு, விளவங்கோடு
வட்டம் (12.02.1948)
2. பி. செல்லைய்யன் நாடார், பெரியவிளை, கீழ்குளம்,
#விளவங்கோடு வட்டம் (14.02.1948).
ஆக பட்டம் தாணுபிள்ளை முதலமைச்சராக இருந்த
இரண்டு காலகட்டங்களிலும் 13 தமிழர்களின் உயிரைப் பறித்து அவரது தமிழர் குரோதத்தை நிறைவேற்றினார்.
குமரி தமிழ் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைந்த இந்த நன்னாளில் (1/11/56) மறைந்த தியாக செம்மல்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் -------------
மார்ஷல் நேசமணி - வக்கீல் பி ராமசாமி பிள்ளை - சிதம்பரநாதன் - - வக்கீல் குஞ்சன் நாடார் - ரசாக் - லூர்தம்மாள் சைமன் - நூறு முகமது - பி எஸ் மணி - பொன்னப்ப நாடார் - - வக்கீல் சி கோபாலகிருஷ்ணன் - தாணுலிங்கம் நாடார் - கொடிக்கால் - சாம் நந்தாணியல் - - காந்திராம்- சிவ தாணு பிள்ளை - சிதம்பரம் - டி டி டானியல் - நெய்யூர் சிங்கராய நாடார் --- இவர்களுடன் குமரி எல்லை மீட்ப்பு போருக்கு உறு துணையாய் நின்ற அன்றைய தினமலர் நாளேட்டின் நிறுவனர் ராமசுப்பையர் என எண்ணிலடங்கா தியாக செம்மல்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் -------------
போராட்டங்களில் காவல்துறையினரால் கொன்று குவிக்கப்பட்ட மங்காடு தேவசகாயம்-, பைங்குளம் செல்லையன் -. , தேம்பனூர் பொன்னையன் -, மேக்கன்கரை ராமையன்,- மணலி எம்.பாலையன்,- தொடுவெட்டி பப்பு பணிக்கர் -. புதுக்கடை அருளப்பன் -, கிள்ளியூர் முத்துசுவாமி,- தோட்டவரம் குமாரன், - புதுக்கடை செல்லப்ப பிள்ளை -, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது ஆகியோரின் தியங்களுக்கு நமது வீர வணக்கம்----
அன்றைய குமரி விடுதலை போராளிகளின் போராட்டம் முழு வெற்றி அடைந்து தமிழர்கள் மிகக்கூடுதலாக இன்றும் வாழும் தேவிகுளம் - பீர்மேடு - நெய்யாற்றின்கரை எஞ்சிய பகுதி - தென்காசி செங்கோட்டை முழுப்பகுதி ஆகியவையும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு தமிழன் தண்ணீருக்காக கையேந்தும் நிலை வந்திருக்காது -
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்
************************
தமிழர்களின் நலம் காத்திட உருப்படியான அரசியல் கட்சி
எதுவும் அவ்வமையம் இல்லாதிருந்த நிலையில், நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் மதிப்புமிக்க வழக்கறிஞர் திரு. சிதம்பரம்பிள்ளை, அதே சங்கத்தில் முன்னணி வழக்கறிஞராக விளங்கிய திரு. எ. நேசமணியை, திருவிதாங்கூர் தமிழர்களின் துயர் துடைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற திரு. நேசமணி 1947 செப்டம்பர் திங்கள் 8 ஆம் நாள், நாகர்கோவில் கிறிஸ்தவ வளாகத்தில் அமைந்திருந்த “ஆலன் நினைவு மண்டபத்தில்” தமிழர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, “திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்” என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். திரு. நேசமணியின் தலைமையில் இந்த இயக்கம் புயல் வேகவளர்ச்சியடைந்தது. மலையாளிகளுக்கும், மலையாள அரசுக்கும் சிம்ம சொப்பனமாக அமைந்தது இந்த இயக்கம். திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்களின் தனி மாகாணம் அமைத்தே தீருவோம் என்ற மக்களின் கோஷம் வானைப் பிளந்தது.
#கன்னியாகுமரி
#கன்னியாகுமரிஇணைப்புபோராட்டம்
#ksrposting
#ksradhakrishnanposting
No comments:
Post a Comment