Monday, October 10, 2016

ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் வெளியீட்டகம்

ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் வெளியீட்டகம்
===================================

சிறுவயதில் கிராமத்தில் ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் வெளியிடும் பெரிய எழுத்தில் அச்சாகும் நூல்களை பார்த்ததுண்டு. ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் வெளியீட்டு நிறுவனம் 1920ல் ரத்தின நாயகரால் துவங்கப்பட்டது.  , அவரது புதல்வர் ரங்கசாமி நாயகர் நடத்தி இன்றைக்கும் கிட்டத்தட்ட 96 ஆண்டுகளாக வடசென்னையில், கொண்டித் தோப்பு, 26, வெங்கட்ராமா தெருவில் இயங்கி வருகிறது. அந்த வட்டாரத்தின் அடையாளமாக இந்த நிறுவனம் இன்றைக்கும் இருக்கின்றது. மருத்துவம், ஆன்மீகம், ஜோதிடம், ஆத்திச்சூடி, சித்தர்கள் இலக்கியம் எனப் பல நூல்கள் வெளியிட்டுள்ளனர். 1935ல் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி வெள்ளி விழா நினைவாக ஜூபிளி என்ற பெயரில் தமிழ் பெயர் அகராதி ஒன்றும் வெளியிடப்பட்டது. மகாபாரதத்தின் 18 பருவங்களும் முழுமையாக வெளியிட்டுள்ளனர். விளம்பரம் இல்லாமல் புகழை நாடாமல் இந்த நிறுவனம் இயங்குவது நமக்கெல்லாம் வியப்பாகவும், பெருமையாகவும் உள்ளது. மேலும் இந்த நிறுவனம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தன் பணிகளை ஆற்றவேண்டும் என்று வாழ்த்துவோம்.

#ரத்தினநாயகர்அண்ட்சன்ஸ் #ksrposting #ksradhakrishnanposting #madras #மதராஸ்

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...