ஸ்ட்ரக்சுரலிசம்:
...............
அமைப்பியல் முதன்முதலில் நூலாய் வந்த போது
அதன் பெயர் "ஸ்ட்ரக்சுரலிசம்".சிலர் ஸ்ட்ரக்சுரலிசமா
அல்லது ஸ்ட்ரக்ச ரலிசமா? எனக்கேட்டார்கள். சமீபத்தில்
நீட்ஷெ யா அல்லது வேறு உச்சரிப்பா எனக் கேள்வி வந்துள்ளது.போர்கெஸா அல்லது போர்ஹெ யா?
நீட்ஷவுக்கும் நீட்ஷெக்கும் நடுவில் உள்ள உச்சரிப்புதான் சரி என்கிறார்கள் ஜெர்மன் மொழி தெரிந்தவர்கள். எ-வுக்கும் அ-வுக்கும் நடுவில் உள்ள உச்சரிப்பு தமிழில் இல்லையே.என்ன செய்வது? தமிழ் இயல்புக்கு ஏற்ப உச்சரிப்பதுதான் சரி. மூலமொழி உச்சரிப்பு மூலமொழியில் பேசும்போது பயன்படுத்தலாம். மற்றபடி தமிழ் இயல்புக்கு ஏற்ப உச்சரிப்பதில் தவறில்லை.
No comments:
Post a Comment