Thursday, October 6, 2016

காவிரிக்கு தீர்வு சொல்லும் 'பக்ரா பியாஸ்

மேலாண்மை காவிரிக்கு தீர்வு சொல்லும் 'பக்ரா பியாஸ்
மேலாண்மை வாரியம்'!

காவிரி விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க ஒரே நிரந்தர வழியான, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக தமிழகம், வலியுறுத்தி
வந்து கொண்டிருக்கிறது.

 காவிரி தண்ணீர் வராதது
போல தமிழகத்துக்கு நீதியும் வராமல் இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-ம்
ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பான காவிரி மேலாண்மை வாரியம் அடுத்த 90 நாட்களில் அமைக்கப்பட்டிருக்க
வேண்டும்.

மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து போட்டுவந்த முட்டுக்கட்டைகளால் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு
வெளியாகி, ஏறக்குறைய 10 ஆண்டுகளாகியும் காவிரி மேலாண்மை வாரியம் கனவாக மட்டுமே
உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும், சட்டத் திருத்தம் வேண்டும் என ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு,
தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி காவிரியால் இருமாநிலங்களுக்கு இடையே மோதலும், கர்நாடகாவில் வன்முறையும் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. இதற்கு தீர்வே இல்லையா? என்ற
கேள்விக்கு ஒரே பதில்
 'பக்ரா பியாஸ் மேலாண்மை
வாரியம்'.

இரண்டு அணை.. ஏழு மாநிலத்துக்கு தண்ணீர்..!

காவிரி தண்ணீரை  கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் பகிர்ந்து
கொள்வதில் இவ்வளவு பிரச்சனைகளும்
வன்முறைகளும் எழும்போது, பக்ரா பியாஸ்
மேலாண்மை வாரியம் பஞ்சாப், ஹரியானா,
ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் ஆகிய 4
மாநிலங்களுக்கும் சண்டிகர், டெல்லி யூனியன் பிரதேசங்களுக்கும், கடந்த 50 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் தண்ணீரை பகிர்ந்தளித்து
வருகிறது.

1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியா- பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, மூன்று கிழக்கு ஆறுகளான சட்லெஜ்,
பீயஸ் மற்றும் ரவி ஆறுகளின் தண்ணீர் இந்தியாவின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. இந்த ஆறுகளில் வரும்
தண்ணீர், ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா அணையிலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பியாஸ் அணையிலும் சேமித்து
வைக்கப்படுகிறது. பக்ரா, பியாஸ் அணைகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர்தான் பஞ்சாப்,
ஹரியானா, ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், சண்டிகர், டெல்லி ஆகிய 7 மாநிலங்களின் விவசாயத்துக்கும்,
குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. அதாவது
காவிரியை நம்பி தமிழ்நாடு, கார்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் இருப்பது போல...

இயற்கை வளம் கொஞ்சும் ஹிமாச்சல பிரதேசத்துக்கும், நாட்டிலே அதிக கோதுமை உற்பத்தி செய்யும் பஞ்சாப்புக்கும், வறண்ட பாலைவனப் பகுதியான ராஜஸ்தானுக்கும், மக்கள் நெருக்கம் மிகுந்த
டெல்லியின் குடிநீர் தேவைக்கும் பக்ரா பியாஸ் தண்ணீர் வேண்டும். நமது உரிமையான காவிரியை
அண்டை மாநிலமான கர்நாடகாவிடம் இருந்து பெறுவதற்குள் நமக்கு உயிர் போகிறது. ஆனால், ஏழு
மாநிலங்களும் பக்ரா பியாஸ் தண்ணீரை எப்படி சின்னச் சண்டை கூட இல்லாமல் பிரித்துக் கொள்கிறார்கள்?
அதன் முழு பெருமையும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தையே சேரும்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முன்னோடி!

1966-ம் ஆண்டு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அப்போதிருந்தே பக்ரா, பியாஸ் அணைகளை இயக்கும் அதிகாரமும், ஏழு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்கும்
அதிகாரமும் இந்த ஆணையத்தின் கையில் வந்தது.

பக்ரா அணை ஹிமாச்சல் மாநிலத்திலும், பியாஸ் அணை பஞ்சாப் மாநிலத்திலும் இருந்தாலும், அணையின் நிர்வாகம், ஆபரேஷன் மற்றும் திட்ட
பராமரிப்பு ஆகியவற்றை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்துகிறது. வருடத்துக்கு 1.25
கோடி ஏக்கர் பாசன நிலத்துக்கும், ஏழு மாநிலங்களில் குடிநீர் தேவைகளுக்கும் பக்ரா, பியாஸ் அணைகளில்
இருந்து எந்த சலசலப்பும் இல்லாமல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்கள் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 34,537.49
எம்.சி.எம் (28 MAF) தண்ணீரைப் பெறுகின்றன. மற்ற
மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் பாசனநிலத்தைப் பொறுத்து தண்ணீர் ஒதுக்கப்பட்டு வருகின்றது. 

வறட்சி காலங்களில் அணைகளில் உள்ள
தண்ணீரின் அளவுக்கு ஏற்ப, ஒவ்வொரு
மாநிலத்துக்கும் சராசரியாக 10 முதல் 20% அளவு
குறைத்து ஒதுக்கப்படும்.  இந்த வாரியத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிகளும்
ஏற்பட்டிருக்கின்றன.

தண்ணீருடன் மின்சாரமும்..!

பக்ரா, பியாஸ் அணைகளில் இருந்து  2,900.73
மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தண்ணீரைப் போல இந்த அணைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தையும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்
ஏழு மாநிலங்களுக்கு பிரித்தளிக்கிறது. பக்ரா
பியாஸ் மேலாண்மை வாரியத்தில் 15,949 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  ஒவ்வோரு மாநிலத்துக்கும் ஒரு உறுப்பினர் என ஏழு உறுப்பினர்கள் மற்றும்
வாரியத்தின் தலைவர் ஆகியோர் கட்டுப்பாட்டில் தான்
இந்த வாரியம் இயங்கி வருகிறது.

இப்படி ஏழு மாநிலத்தின் தண்ணீர் பிரச்சனைகளை எந்த
சண்டை, சச்சரவுகள் இல்லாமல்  
பக்ரா பியாஸ்
மேலாண்மை வாரியத்தால் தீர்க்கும்போது, காவிரி தண்ணீர் பிரச்சனையை காவிரி மேலாண்மை
வாரியத்தால் தீர்க்க முடியாதா? முடியும்.. அதற்கு மத்திய அரசு மனது வைக்க வேண்டும்.  முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கிறோம்
என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். 
செய்யுமா?வாரியம்'!

செய்யுமா?

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...