தமிழில் முதல் புதினம் (நாவல்) படைத்த
மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை
(11-10-1826- 21-07-1889)
* இதே நாளில் திருச்சியிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் பிறந்தார்.
* தமிழ், ஆங்கில மொழிகளை தமது தந்தையிடமும், தியாகராசப்
பிள்ளையிடமும் முறைப்படி கற்றார்.
* இளம் வயதிலேயே நகைச்சுவையாக கவிதை புனைந்து பாடியதால் வரகவி என்றழைக்கப்பட்டார்.
* நீதிமன்றங்களில் பதிவாளர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பதவிகளை வகித்து பின்பு தரங்கம்பாடியில் முன்சீப், பின்பு மயிலாடுதுறையில்மாவட்ட முன்சீப்பாக 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்பு நகர மன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.
* சிறந்த வீணை இசைக் கலைஞரான வேதநாயகம் 16 புத்தகங்களை எழுதினார். " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பதே தமிழின் முதல் நாவல் ஆகும். அதற்கு முன்பு
செய்யுளாகவே தமிழில் எழுதினார்கள்.
* ஒரு மன்னன், "பிற ஸ்திரீகள் காணாத மார்புடையோனாகவும், எதிரிகள் காணாத
முது குடையோனாகவும்"
இருக்க வேண்டும் என்று அந்த நாவலில் கூறியுள்ளார்.
* 1850களில் தீண்டாமை, பெண்ணடிமை எப்படி சமூகத்தில் வேரூன்றியிருந்தது என்பதையும் அந்த நாவலில் காணலாம்.
* லஞ்ச ஊழல், பொய் சாட்சி, பொய் ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளித்தல், பிறர் மனைவியை நோக்கல், அரசு சொத்தை அபகரித்தல் போன்ற செயல்கள் அப்போது எப்படி நடைமுறையில் இருந்தது என்பதையும் அந்த நாவலில் வேதநாயகம் விளக்கி இருப்பார்.
* 1805 முதல் 1861 வரையிலான காலத்தின் ஆங்கில மொழித் தீர்ப்புகளை (southern Judgments) தமிழில் சித்தாந்த சங்கிரகம் என்ற பெயரில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டு சட்ட மொழிபெயர்ப்புக்கு அரியதொண்டாற்றினார். 1862 , 1863 ஆண்டுகளின் தீர்ப்புகளையும் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் இவரே. தமிழில் வாதாடுதல் என்பதற்குக் கருத்தாக்கமும், காரணகர்த்தாவும் வேதநாயகமே ஆவார்.
* வெண்மதி மாலை, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி, சர்வ சமயக் கீர்த்தனை, சுகுணசுந்தரி, சத்திய வேத கீர்த்தனை, பொம்மைக் கல்யாணம், பெரியநாயகியம்மன் போன்ற நூல்கள், நாவல்கள், கீர்த்தனைகள் மற்றும் பல தனிப்பாடல்களை எழுதித் தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
* 1865 1866 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன் சொத்து முழுவதையும் தந்த வள்ளல்.
* இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் மிகுந்த நெருக்கம் காட்டியவர்.
No comments:
Post a Comment