பத்தமடை பாய்:
............
பத்தமடை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் இந்த பத்தமடை. இங்குதான் உலக புகழ் பெற்ற பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் காய்ந்த கோரைப்புல் கொண்டு, பத்தமடை பாய்கள் பின்னப்படுகின்றன. பிற இடங்களைக் காட்டிலும், இங்கு வளரும் கோரைப் புல் நல்ல தரமானவை.
இந்த அழகிய கோரைப் புல்லினால் நெய்யப்படும் பாய்கள் குறுக்கு இழை பருத்தி அல்லது பட்டினால் ஆன இழைகளால் நெய்யப்படுன்றன. தமிழர்களின் கை வண்ணத்தை பறைசாற்றும் பாரம்பரிய பொருட்கள் வரிசையில் # பத்தமடைபாயும்ஒன்று. கோரைப் பாயில் படுத்து உறங்குவது உடல் நலத்திற்கு நல்லதாகும். கோரையினை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும்.
இதில் சிறுசிறு துளைகள் காணப்படும். இது வெப்பத்தினைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்பட்டு உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. இந்த உலகில் சுமார் 10,000 புல் வகைகள் இருக்கின்றன, அது மட்டும் இல்லை இதுதான் உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அதிகமான தாவர இனம் ! இந்த தாவர இனத்தில் இருப்பதுதான் நாணல் (Reed) எனப்படுவது. நாணல் என்பது தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில்தான் வளரும், இதனால் இயற்கையிலேயே நாணலில் குளிர்ச்சி அதிகம்.
No comments:
Post a Comment