.............
இன்றைய தினமணி இதழோடு( 25/10/16 ) கோவை நகரத்தை பற்றிய சிகரம் தொடும் நகரம் என சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
#கோவை நகரத்தை நிர்மாணித்தவருமான மறைந்த பா.நரசிம்மலு நாயுடு அவர்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால் அவர் கட்டிய கட்டிடத்தில் தான் கோவை மாநகர மன்றம் செயல்படுகிறது . 1892 ல் விக்டோரியா டவுன்ஹால் என்று அதை கட்டியவர் அவர் தான் .
கல்கத்தாவுக்கு சென்று பருத்தி அரவை இயந்திரங்களை வாங்கி வந்து கோவையில் பருத்தி தொழிலை தொடங்கியவர் அவர் தான் .
கோவை கம்பர் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராகவும் , காமராசருக்கு தளபதியாகவும் விளங்கிய திரு கருத்திருமன் .
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள்துனைவேந்தராகவும் ;
கலைக்கதிர் இதழின் ஆசிரியர் , முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியின் நிறுவனுருமான டாக்டர் ஜி. ஆர் . தாமோதரன் .சர்க்கரை மன்றாடியார். திருப்பூர் நஞ்சப்பசெட்டியார் .
திருப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் கே.என். பழனிசாமி கவுண்டர் . பெத்தாம்பாளையம் பழனிச்சாமி கவுண்டர் .டாக்டர் இராஜம்மாள் தேவதாஸ் , நவ இந்தியா ஏட்டின் நிறுவனர் பி.ஆர்.ராமகிருஷ்ணன் மற்றும் இன்றைக்கும் திரையுலகில் ஜொளிக்கின்ற நடிகர் சிவகுமார் ஆகியோரை குறிப்பிடாமல் மலரில் விடப்பட்டுள்ளது என்பதை தினமணியின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் !!
வணக்கம் சார்.. பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்களின் சொந்த ஊர் எது? தி.மு.க தனியாக வந்த பின்னர் அவர் வகித்த பதவிகள் என்னென்ன ?
ReplyDeleteபல்லடம்...கோவை மாவட்ட தலைவர்..
Delete