Wednesday, January 9, 2019

சென்னை கிரீன்வேஸ் ரோடு எனப்படும் பி.எஸ்.குமாரசாமி சாலை


சென்னை கிரீன்வேஸ் ரோடு எனப்படும் பசுமைவழிச்சாலையை 15 ஆண்டுகளுக்கு முன்பாக பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரால் அழைக்க பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றும் பத்திரிக்கைகள் கிரீன்வேஸ் ரோடு(பசுமை வழி சாலை) என்றே எழுதி வருகின்றன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த செல்வந்தரான குமராசாமி ராஜா அவர்கள் ஒரு நேர்மையான முதலமைச்சர். ஓமந்தூரார் விட்டுச்சென்ற அணைகள், கிராமங்கள் முன்னேற்றம்,கல்வி போன்ற திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கித் தந்தவர்.
பொது வாழ்வுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் . சட்டமன்றத்தில் இவருக்கு 
படம்கூட வைக்கப்படவில்லை.
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
09/01/2018


No photo description available.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...