Monday, September 6, 2021

#வஉசி ———-

 #வஉசி

———-
“உல்லாசத்துடன் விடலை புருஷனாக சுற்றிக் கொண்டிருந்த நான், வ உ சி போன்ற பெரியவர்களைப் பார்த்துதான் பொதுத் தொண்டுக்கு வந்தேன்” என்று வ.உசி.முன்னிலையிலேயே கூறியவர் பெரியார்.
(1927ல் கோவில்பட்டியில் தமிழ் அறிஞர் விருதுநகர் சிவஞான யோகி என்பவர் நடத்தி வந்த திராவிடர் கழகத்தின் மாநாட்டில் வ.உ.சி.யும் பெரியாரும்கலந்துகொண்டுஉரையாற்றியுள்ளனர்.திராவிடர் கழகம் என்ற பெயரில் ஜான் ரத்தினம் ஓர் இயக்கத்தை நடத்தியுள்ளார். விருதுநகர் சிவஞான யோகி நடத்தியுள்ளார்).
”திராவிட காண்டம்” என்று ஒரு அறியநூலை கடலூர் கனகசபை பிள்ளை எழுதி வெளியிட்டுள்ளார். வெளியிட்ட வருடம் சரியாகத்தெரியவில்லை. இந்த நூலுக்கு விருதுநகர் சிவஞான சுவாமிகள் மட்டுமல்ல மகா கவி பாரதி , உவேசா போன்ற அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். இந்த நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் குறித்தான செய்திகள் உள்ளன. கடல்கொண்ட தெங்குநாடு (7), மதுரைநாடு (7), முன்பாலைநாடு (7), பின்பாலைநாடு (7), குன்றநாடு (7), குணக்காரைநாடு (7), குறும்பனைநாடு (7) ஆகிய 49 திராவிட நாடுகளை கணக்கிட்டுச் சொல்கின்றார்.
”சீர்கொண்ட தொண்டைமண் டலமிருப துடனாலு
செப்பிடுங் கோட்ட மவயிற்
சேருமெழு பத்தொன்ப தாகுநா டவைபினூர்
தச நூறு நவ நூறதாம்
பார்கொண்ட கோத்திரம் பன்னிரா யிரமுன்
பகர்ந்தபட் டயமுள்ளதிப்
பட்டயந் தனிவில்லை யுள்ளபடி முன்னோர்
பகர்ந்திடு மூர்களவையில்
வேர்கொண்ட காடுசில வாயவோ திரைவீசு
வேலைசில தைக்கொண்டதோ
வேற்றரசர் நாட்டினிற் சேர்ந்திட்ட வோவலது
மேடாய்வ ளர்ந்திட்டவோ
கார்கொண்ட நீர்கொண்டு பள்ளவழி யாயவோ
கழறுமிவ் வூர்களெல்லாங்
கச்சியிற் கல்வெட்டு செப்பேட்டி லுளவென்று
கற்றநா வலர்சொன்னதே”.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06.09.2021.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".