Thursday, September 2, 2021

#கிரா_விருது_பெற்ற_கோணங்கி ———————————————————

 #கிரா_விருது_பெற்ற_கோணங்கி

———————————————————
கிரா விருது பெற்ற கோணங்கி இன்றைக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவர் கோவில்பட்டியாக இருந்தாலும் இரண்டு, மூன்று தடவைதான் சந்தித்ததுண்டு. இதுவரை அவருடன் நேரடியாகவோ, தொலைபேசியிலோ பேசியதில்லை.
கடந்த 1989-ல் சட்டமன்ற தேர்தலில் நான் கோவில்பட்டியில் திமுக வேட்பளராக போட்டியிட்ட போது; இடைசெவல் கிராமத்திற்கு கிராவைச் சந்திக்கச் சென்ற சமயத்தில் கோணங்கியை பற்றி கிரா சிலாகித்தார். இது நடந்தது கிரா புதுவைக்கு வருவதற்கு முன்பு. எனக்கு அப்படிதான் கோணங்கியைப் பற்றிய அறிமுகம்.
அவருடைய மூத்த சகோதரர் தமிழ்ச்செல்வன் என்னோடு தொடர்பில் இருந்தவர். இவர்களின் பூர்வீகம் சாத்தூர் நென்மேனி மேட்டுப்பட்டி இருந்தாலும் கோவில்பட்டியிலிருந்தே இயங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது கோவில் பட்டியில் பல படைப்பாளிகள் வலம் வந்தநேரம். இன்றைக்கு கோணங்கி, கரிசல் இலக்கிய படைப்புகள், தான் எழுதிய படைப்புகள் குறித்தான விடயங்கள், இனி தான்படைக்கப் போகின்றப் படைப்புகளைக் குறித்து விரிவாக பேசினார்.இது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.
கோணங்கியின் படைப்புகள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று என்னுடைய கருத்தை அவரிடம் கூறினேன். கோணங்கி எளிமையான வாழ்க்கை, தேடல், வாசிப்பு, ஆழமானப்புரிதல், அற்புதமான சொல்லாடல் என பல சிறப்புகளையும், மேன்மைகளையும் தன்னகத்தே கொண்டவர்.
சமகாலத்தில் படைப்பாளிகளுக்கு ஒரு இலக்கணமாக திகழ்கின்றார் கோணங்கி அவர்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01.09.2021

No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...